அனுனாகிகளை எகிப்தியர்களுக்கு முன்னரே வணங்கியது இந்தியர்களே!

AUTOCLAVED AERATED CONCRETE இது தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள கற்களில் ஒன்று

லியோ

வளர்ச்சி ஒரு அற்புதமான சொல். இன்றைய காலக்கட்டத்தில் வாழும் நாம், குறிப்பாக இந்தியர்களான நாம் பல வளர்ந்த நாடுகளை கண்டு வியந்து நிற்கிறோம், அதற்கு முக்கிய கரணம் அந்த நாட்டின் அறிவியல் வளர்ச்சியே. வான் உயர வளாகங்கள். மின்னல் வேக வாகனங்கள் என்று பட்டியலோ நீளும். ஆனால் பிற நாடுகளை விட பன்மடங்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்த மக்கள் நாம் என்று சொன்னால் நம்புவீர்களா? இதோ நம் பெருமை பின்வருமாறு.

வரலாற்றில் 800 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்த்தபோது, நம் மக்களும் அவர்களை ஆண்ட மன்னர்களுக்கு வாழ்ந்த முறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. குளிர்சாதன அறை, உடற்பயிற்சி கூடம், தலைசிறந்த உணவு, சொகுசு ஊர்திகள் என்று பட்டியல் நீள்கிறது. அதிலும் அன்றைய கால கட்டிடங்கள் பலவற்றை எப்படி வடிவமைத்தனர் என்று இன்று வரை விடை தெரியாத வடிவங்கள். 100 டன் எடை கொண்ட பாறையை கூட மிக நேர்த்தியாக உடைத்தனர் நம் முன்னோர்கள்.

நவீன விஞ்ஞானத்தால் கூட வெட்ட முடியாத துளைகள், அந்த துளைக்குள் சிறிய சிற்பங்கள், இரும்பை கூட வளைக்க முடியாத வடிவங்களில் கற்களை வளைதல் என்று ஆச்சர்யங்கள் பல.

AUTOCLAVED AERATED CONCRETE, இது தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள கற்களில் ஒன்று. உலகின் மிக உயரமான கட்டிடமாக திகழும் துபாயின் புர்ஜ் கலிபா கூட இத்தகைய கற்கள் கொண்டு வடிவமைக்க பெற்றதே. ஆனால் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள லெபாக்ஷி கோவிலில் 900 ஆண்டுகளுக்கு முன்னைய இந்த கற்கள் பயன்படுத்தப்பட்டு இன்றளவும் கம்பீரமாய் நிற்கிறது. நிலநடுக்கம் அதிகம் உள்ள பகுதிகளை அன்றே கணக்கிட்டு கட்டப்பட்டுள்ளது.

சூரியன், சந்திரன், செவ்வாய் என அனைத்தின் பாதையை கண்டு அதன் திசையில் பல கோவில்கள் கட்டி வழிபட்டுள்ளோம். இந்தியாவில் பல கோவில்கள் சுரங்கப்பாதைகள் கொண்டது. அதில் சில, பல ஆயிரம் கிலோமீட்டர் கூட நீளம் உள்ளதாக உள்ளது, அவை எப்படி வடிவமைக்க பெற்றன?, எப்படி பூமிக்கடியில் பிராணவாய்வு செலுத்தினர்?, இதைத் தோண்ட என்ன கருவிகள் பயன்படுத்தினர்? என்பது இன்றளவும் வியப்பை மட்டுமே தருகிறது.

இன்று நாம் பயன்படுத்தும் உருக்கு ஆலைகளும், லத்தே, ட்ரில்லிங் என அழைக்கப்படும் வெட்டுக்கருவிகளும், கிரேன் என்று அழைக்கப்படும் பளுதூக்கிகள் என்று அனைத்தையும் நாம் அன்றே பயன்படுத்தினோம் என்பதற்கு சான்று ஹம்பி கோவிலில் இன்றளவும் உள்ளது.

விஞ்ஞானத்தில் கில்லாடிகளாக அறியப்பட்டவர்கள் எகிப்தியர், அவர்கள் பாதி மிருகமாவும் பாதி மனிதனாக உள்ள அனுனாகி என்ற ஒரு வடிவத்தை வணங்கினர். ஆனால் அவர்களுக்கு முன்னே நாம் அந்த அனுனாகிகளை வணங்கியுள்ளோம். மனிதன் இறந்த பின் அவன் ஆன்மா தனி ஒரு மூலத்திற்கு பயணிக்கும் என்றும் அவர்களால் காலங்களை தாண்டி பயணிக்க முடியும் என்றும் எகிப்திய கூற்று தெரிவிக்கிறது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே நாம் அதை பற்றிய உரைகளை எழுதியுள்ளோம். நம் தொன்மையை ஆராய்ந்த தற்கால வல்லுநர்கள் அதிர்ந்து போகின்றனர். இவை என்னவென்று விளக்கம் தரமுடியாத விஷயங்கள் பல, எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்று குறிப்பிடமுடியாத ஏடுகள் பல. உலகிற்கு அத்தனை வளர்ச்சிக்கான வழிகளை வித்திட்டது நாமே. பெருமை கொள்வோம் இந்தியராக.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close