காமெடி டைம் அர்ச்சனா என்றால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.
Advertisment
சின்னத்திரை மட்டுமல்ல, வெள்ளித் திரையிலும் அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து நடித்த டாக்டர் படம் வசூலை வாரிக் குவித்தது.
அர்ச்சனா Wow Life எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் இவரது ஹோம் டூர், கிச்சன் டூர், ஃபிரிட்ஜ் டூர் வீடியோக்கள் மிகவும் பிரபலம்.
Advertisment
Advertisements
அர்ச்சனாவுக்கு அனிதா என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவருக்கு ஆர்யன் என்ற ஆண்குழந்தை உள்ளது. அர்ச்சனா, அனிதா, சாரா மூவரும் குட்டிக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி தங்கள் இன்ஸ்டாகிராமிலும், யூடியூப் பக்கத்திலும் பகிர்வார்கள்.
இந்நிலையில் அனிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவுதான் இப்போது வைரல் ஆகியுள்ளது.
திருமண நிகழ்வுகளின் போது, என்னிடம் உறவினர்கள், உங்கள் மகன் ரொம்ப கியூட்டாக இருக்கான், ஆனால் கொஞ்சம் கருப்பாக இருக்கான். அவன் அப்பாவை போல கொஞ்சம் கருப்பா இருக்கான் . உங்க நிறமா இருந்திருக்கலாம்ல. அப்புறம் உங்களை மாதிரி ஒல்லியா இருக்கான். அவுங்க அப்பா மாதிரி கொஞ்சம் கொழுகொழுனு இருந்திருக்கலாம் என்கின்றனர்.
குழந்தைகள் எப்படி இருந்தாலும் பர்ஃபெக்ட் தான். தயவு செய்து அவர்கள் தோற்றம் மற்றும் அவர்கள் இருக்கும் விதத்தை வைத்து குழந்தைகளை மதிப்பிடாதீர்கள். நீங்கள் நிச்சயமாக ஒரு பெற்றோரை காயப்படுத்துகிறீர்கள் (நீங்கள் நினைக்காவிட்டால் கூட). எந்த தாயும்/தந்தையும் தங்கள் குழந்தைகளை பற்றி எதிர்மறையாகவோ அல்லது நல்லது இல்லாதது எதையும் கேட்க விரும்ப மாட்டார்கள்.
நாம் தற்செயலாக சொல்லும் விஷயங்கள் கூட பெற்றோருக்கு ஒரு பெரிய நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்பாக இருங்கள் ❤ என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
அதற்கு அர்ச்சனா, எவ டி அவ புள்ளய பத்தி அப்படி பேசுறவ? பின்னிடுவன் சொல்லி வை என்று கமென்டில் பதிவிட்டுள்ளார்.
அனிதாவின் இந்த பதிவை பார்த்த பல பெற்றோரும், இது உண்மை. எனக்கும் இது நடந்துள்ளது. இந்த மக்களுக்கு நாம் என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. குழந்தைகளை மதிப்பிடுவதே நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“