புஷ்பவனம்- அனிதா குப்புசாமி தம்பதியினர் மிகவும் பிரபலமானவர்கள். கிராமிய பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றனர். ஏராளமான கிராமிய பாடல்களை பாடியுள்ளனர். உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று கச்சேரி நடத்தி வருகிறார்கள்.
இருவரும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். கிராமிய பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள், பக்தி பாடல்கள் எனப் பல பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பல்லவி, மேகா உள்ளனர். இதில் பல்லவி சென்னையில் பல் மருத்துவராக உள்ளார். இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
அனிதா குப்புசாமி சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கிறார். அதில் மாடித் தோட்டம், சமையல் குறிப்புகள், பக்தி, பூஜை தொடர்பான செய்திகள் கூறி வீடியோ பதிவிடுவார். குறிப்பாக மாடித் தோட்டம் இவர்களின் கிராமிய பாடல்கள் அளவிற்கு பேமஸ் ஆகிவிட்டது. மாடித் தோட்டத்தில் ஏராளமான காய்கறி செடிகள் வைத்துள்ளனர். தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய் எனப் பல காய்கறிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் செடிகளிடம் பேசினால் காய்கறிகள் நன்றாக வளரும் என டிப்ஸ் கூறியுள்ளனர். ஆனால் சிலர் இதற்கு நெகட்டிவ் ஆக கமெண்ட் சொல்கிறார்கள் எனக் கூறி அனிதா குப்புசாமி விளக்கம் அளித்துள்ளார். அனிதா குப்புசாமி கூறுகையில், “என் கணவர் செடி கொடிகளுடன் பேசினால் நன்றாக வளரும் எனக் கூறினார். அதற்கு பலரும் பைத்தியம் என்று கமெண்ட் செய்தார்கள். நான் பதில் சொல்கிறேன். நான் உங்களை திட்டவில்லை. நீங்கள் அறியாமையில் சொல்கிறீர்கள். விவசாய அறிஞர்கள், விஞ்ஞானிகள் சொல்வதை கேளுங்கள்.
செடிகளுடன் பேசினால் கட்டாயம் அது நன்றாக வளரும். ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள். நாதஸ்வரம், தவில் வாசித்து இசை கருவிகள் வாசித்து செடி வருகிறது என்பதை காட்டி உள்ளார்கள். நாம் பேசுகின்ற வைபரேசன் செடி கொடிகளுக்கு பிடிக்கும். அதற்கு கேட்கும். சத்தம் உள்ள இடத்தில் காய்கள் நிறைய வளரும். இதை நீங்கள் கவனித்து பாருங்கள். பலருக்கும் இது தெரியவில்லை. அதனால் தான் இப்படி சொல்கிறார்கள். இளைஞர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் கற்க வேண்டும். விவசாயிகள் சொல்கிறார்கள். அதை கேளுங்கள்” என்று கூறி மாடித் தோட்டத்தில் அழகழகாக காய்திருந்த நாட்டு தக்காளியை பறித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“