மகாளய அமாவாசை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? அனிதா குப்புசாமி
நமக்கு உள்ள நிறைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மாதந்தோறும் தர்ப்பணம் கொடுப்பதும் மிக முக்கியம்தான்.
இந்த ஆண்டு மகாளய அமாவாசை அக்.14ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில் முன்னோர்கள் ஆசி கிடைக்கவும், அவர்களுக்கு உரிய காரியங்களை செய்வது குறித்து அனிதா குப்புசாமி தனது வலையொளி தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “மகாளய அமாவாசை தொடர்பான தகவல்கள் கருட புராணத்தில் உள்ளன. பொதுவாக 13 தலைமுறை என்பார்கள். இதில் பாட்டி, தாத்தா தலைமுறை பற்றி ஆனால், 13 தலைமுறை என்றால் என்ன? எப்படி இவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்? என சிலர் கேட்கிறார்கள்.
Advertisment
நமக்கு உள்ள நிறைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மாதந்தோறும் தர்ப்பணம் கொடுப்பதும் மிக முக்கியம்தான். ஆனால் நம் முன்னோர்கள் 13 தலைமுறைக்கும் தர்ப்பணம் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம். இவ்வாறு தர்ப்பணம் கொடுக்கும்பட்சத்தில் சாபம், துன்பங்கள் நீங்கும்.
மேலும் தந்தை இல்லாத பட்சத்தில் மகனும், தந்தை இருக்கும்பட்சத்தில் தந்தையும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி மகாளய அமாவாசை தினத்தில் உணவு அருந்தாமல் அமைதியாக விரதம் இருக்கலாம். அப்போது நமது முன்னோர்களை நினைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக அதிகாலை சூரிய உதயத்தில் இருந்து மதியம் 1 மணி வரை விரதம் இருக்கலாம்.
அந்தக் காலக்கட்டத்தில் சண்டை, வாய்த் தகராறு கூடாது. மேலும் பெண்கள் கூட தர்ப்பணம் கொடுக்கலாம். அதாவது, அந்தணர்களை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அது சாத்தியப்படாவிட்டால் தனது கணவரை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் அல்லது முன்னோர்களுக்கு பிடித்த பொருள்களை சமைத்து படையல் செய்யலாம்.
அப்போது அவர்களின் பெயரை நினைத்துக் கொண்டு அவர்களுக்காக ஒரு ஹாலில் இலைப் போட்டு தண்ணீர் வைத்து எள் வைத்து படையல் படைக்கலாம்” என்றார்.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஏனையோருக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“