வெறும் 1500 சதுர அடி மொட்டை மாடியில் இவ்ளோ மரம், செடிகள்: அனிதா குப்புசாமி வீடியோ

ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்கள் வீட்டுத் தோட்டம், இன்று நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் சோலைவனமாக காட்சியளிக்கிறது.

ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்கள் வீட்டுத் தோட்டம், இன்று நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் சோலைவனமாக காட்சியளிக்கிறது.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pushpavanam kuppusamy

Pushpavanam kuppusamy

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.

Advertisment

ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்கள் வீட்டுத்  தோட்டம், இன்று நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் சோலைவனமாக காட்சியளிக்கிறது.

publive-image

அண்ணாமலை கத்தரி, பச்சை குண்டு கத்தரி, பச்சையில நீளமா வளர்ற கத்தரி, மரி கத்தரி என கத்தரியின் அனைத்து வகைகளும், அடுக்கு மல்லி, குண்டு மல்லி, மதுரை மல்லி, கனகாம்பரம், பாரிஜாதம், செண்பகப்பூ , நித்தியமல்லி, ரோஜாச்செடி என பலவகையான பூக்களும் இந்த தோட்டத்தில் உள்ளன. பாவக்காய், எலுமிச்சை, மாதுளை என வீட்டுக்கு தேவையான அனைத்து காய்கறிகளும், மாடித் தோட்டத்தில் இருந்தே முற்றிலும் இயற்கையாக உற்பத்தி செய்து கொள்கின்றனர்.

Advertisment
Advertisements

அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் அனிதா யூடியூப் ஷார்ட்ஸில் பகிர்ந்துள்ள புதிய வீடியோ இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் இந்த மாடித்தோட்டம் 1,500 சதுர அடி கொண்டது. அதுல கொஞ்சம் கூட இடம் வேஸ்ட் பண்ணாம தோட்டம் அமைச்சிருக்கோம். நேரா கூட நடந்து போக முடியாது. ஒருபக்கமா நடந்து போற மாதிரி ஒத்தையடி பாதைத் தான் இருக்கு. இந்த தோட்டத்துல என்னென்ன வைக்க முடியுமோ அத்தனையும் வச்சிருக்கோம். பூமி தான் நம்ம முதல்ல வணங்கனும். அது இல்லாம நமக்கு என்ன கிடைக்கும். உணவு இல்லாம உயிர் வாழ முடியாது. அந்த உணவு தர்ற பூமிதான் நமக்கு தெய்வம் என்கிறார் புஷ்பவனம் குப்புசாமி.

அந்த வீடியோ பாருங்க

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: