தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான். புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.
குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார்.
பல்லவி பாடகர், மருத்துவர், இன்ஃபுளூயன்சர், ஃபிட்னெஸ் ஆர்வலர் என பன்முகத்திறமை கொண்டவர். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில், பல்லவி தன் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
அதில், லேட்டஸ் அடிக்ஷ்ன் என்று கூறி, வாத்தி படத்தின் ’ஒரு தல காதலை தந்த’ பாடலை தன் சொந்த குரலில் பாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழகத்திலேயே நாட்டுப்புற பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது புஷ்பவனம் குப்புசாமி தான். அவரது மகள், பல்லவி’ தனது மென்மையான குரலில் பாடும் வீடியோவை இப்போது அனைவரும் ரசித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“