தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.
Advertisment
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனிதா குப்புசாமி சமீபத்தில் இன்டியா கிளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
அதில் தொகுப்பாளினி, ’இப்போ ரஞ்சிதமே பாட்டு சூப்பர் ஹிட் ஆச்சு, ஆனா அதுவே 94ல வந்த மொச்சைக் கொட்டை பல்லழகி பாட்டோடு சாயல்ல இருக்கு சொன்னாங்க, ஆனா அதுக்கும் முன்னாடி 89ல புஷ்பவனம் குப்புசாமி பாடுன தஞ்சாவூர் மண்ணெடுத்து பாட்டும் அதே மெட்டுதான். அந்த பெருமை எங்க சேரும்’ என அனிதாவிடம் கேட்கிறார்.
Advertisment
Advertisements
இதற்கு பதிலளித்த அனிதா, இந்த பெருமை என் வீட்டுக்காரரே தான் சேரும். ரஞ்சிதமே, மொச்சைக் கொட்டை பல்லழகி பாட்டு எல்லாம் அந்த மெட்டுதான். ஆனா பீட் மாத்திட்டாங்க. ரஞ்சிதமே பாட்டை கேட்ட உடனே, என் கணவர் நம்ம பாட்டு இதுன்னு சொன்னார்.
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே பாட்டு கூட அந்த ட்யூன் தான். அந்த டியூன்ல நிறைய பாட்டு வந்துருக்கு. அந்த ட்யூனுக்கு சொந்தக்காரர் என் ஆளு. இப்போ எல்லாம் காப்புரிமை பிரச்னை வருது. ஆனா, என்னோட கணவர் மனுஷன் காய்ஞ்சாலும், மனுஷனோட மண்டை காயாது. நான் கிராமத்தான், இந்த மாதிரி எத்தனை பாட்டு வேணாலும் கொடுப்பேன் சொல்லுவாரு.
சீரகம் பாத்திக் கட்டி செடிக்கு செடி குஞ்சங்கட்டி அவரோட பெரிய ஹிட் சாங், சந்திரமுகி படத்துல அத்திந்தோம் பாட்டுக் கூட அவரோட ட்யூன் தான். என் கணவர்கிட்ட பேசி இந்த ட்யூன் வேணும் கேட்டாங்க. அப்போ ட்யூன் கொடுக்கிறேன், ஆனா நான் பாடணும் சொன்னார்.
நான் எத்தனையோ பாட்டு பாடியிருக்கேன். அதை பாடுற வாய்ப்பு எனக்கு கொடுங்க கேட்டதுக்கு மறுத்துட்டாங்க, அப்புறம் அது வேற எப்படியோ போயிடுச்சு.
ஒரு பாட்டை வச்சு 100 ட்யூன் கொடுக்கிற அளவுக்கு அவருக்கு இசை ஞானம் இருக்கு. ஆனா அவர் ஆதங்கப்படுற விஷயம் அது என் பாட்டு தான். அதை ஆண் குரல் தான் பாடுறாங்க, நான் நிறைய பாடுறேன். அந்த பாட்டு பாடுறதுக்கு வாய்ப்பு கொடுத்தா எனக்கு பெருமையா இருக்கும்னு சொல்லுவாரு.
இந்த மாதிரி 100 பாட்டுக்கு மேல போயிருக்கு. கிரெடிட்ஸ் கூட கொடுக்கமாட்டங்க. இதெல்லாம் பாக்கும் போது இளையராஜா சார் செய்ஞ்சது சரின்னும் தோனுது. இதை அவர் செய்யும் போது அவருக்கு பெருந்தன்மை இல்லன்னு எல்லாம் தப்பு சொன்னாங்க, ஆனா அதுக்காக அவரு எவ்வளவு உழைச்சுக்காரு. அதான் நான் இப்போ என் வீட்டுக்கார்க்கிட்டயும் நீங்களும் அதையே செய்ங்க சொல்லிருக்கேன் என்று கூறினார் அனிதா குப்புசாமி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“