தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது மனைவி அனிதாவும் பிரபல பாடகி தான். குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.
ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்கள் வீட்டுத் தோட்டம், இன்று நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் சோலைவனமாக காட்சியளிக்கிறது. 1,200 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில்’ வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர். இதன் மூலம் வீட்டுத்தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்கின்றனர்.
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அனிதா யூடியூப் ஷார்ட்ஸில் பகிர்ந்துள்ள புதிய வீடியோ இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், நிறைய பேரு நீங்க என்ன உரம், என்ன மண்ணு போடுறீங்க கேட்குறீங்க, நிறைய எல்லாம் உரம் போடுறது இல்ல. புண்ணாக்கு தண்ணிய ஊற வச்சுட்டு 15 நாளைக்கு ஒரு தடவை போட்டா போதும். அப்புறம் செம்மண், மணல், உர மண், இந்த மூன்றையும் சரியான கலவையில போட்டா நல்ல இருக்கும் என்று கூறினார்.

முன்னதாக ஒருமுறை புஷ்பவனம் குப்புசாமி மாடித்தோட்டம் எப்படி வைப்பது? பூச்சி தாக்கினால் என்ன செய்வது என்பது குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதை தெரிந்து கொள்ள கீழே படியுங்கள்..
தோட்டம் இருந்தா பூச்சி கண்டிப்பா வரும்.. அதுக்கு சிம்பிள் தீர்வு.. புஷ்பவனம் குப்புசாமி டிப்ஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“