தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.
Advertisment
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அனிதா குப்புசாமி சமீபத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கல்லூரி படிக்கும் காலத்தில் தனக்கு வந்த காதல் கடிதங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
Advertisment
Advertisement
”படிக்கும் போது நிறைய லவ் லெட்டர்ஸ் வரும். அதுல ஏதோ ஒரு புரோபசல் நினைச்சுட்டு அவர் எழுதுன லெட்டரை அவர்கிட்டயே கொண்டு கொடுப்பேன். அதுல ஓரு கவிதை நயம் இருக்கும்.
சார் ஏதோ ஒரு பொறுக்கி யாருன்னு தெரியல. எனக்கு லவ் லெட்டரா அனுப்புறான்னு சொல்லுவேன். என் வீட்டுக்கார் ஒன்னுமே தெரியாத மாதிரி அப்படிங்களா? எந்த பொறுக்கி பார்க்கலாம். என்கிட்ட கொடுங்க சொல்லுவாரு. லெட்டரை பிரிச்சி என் வாயாலேயே வாசிங்கன்னு சொல்லுவார். அதுல குஷ்பு பெயர் போட்டிருக்கும். இந்த மாதிரி நிறைய லெட்டர் வச்சுருக்கேன்.
எல்லாரும் நகை, பணத்தை பத்திரமா பூட்டி வைப்பாங்க, நீங்க இதை வச்சிருக்கீங்கனு என் பொண்ணு கூட சொல்லுவா,
பிறகு புஷ்பவனம் குப்புசாமி பேசுகையில்; கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க மைனஸ்ல இருந்துதான் ஸ்டார்ட் பண்ணோம். என் மனைவிய 3 மாசம் அவுங்க வீட்டுலேயே விட்டுட்டேன். அவங்க தாத்தா காசு தரேன்னு சொன்னாங்க, ஆனா நான் வாங்கல. நானே சம்பாதிச்சு நானே வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து அப்புறம் தான் அழைச்சுட்டு போனேன்.
திரைப்படத்துல வித்யாசாகர் தான் எனக்கு முதல்ல பாட வாய்ப்பு கொடுத்தாங்க. ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ தான் நான் பாடுன முதல் சினிமா பாட்டு. நான் எவ்ளோ சினிமா பாட்டு பாடினாலும் கச்சேரி போகும் போது சினிமா பாட்டு பாடுங்க சொல்லி யாருமே எங்களை கேட்டது இல்ல.
நான் ரொம்ப கஷ்டப்பட்டு பாதை போட்டிருக்கோம். ஆனா இப்போ மக்களிசை பாடல்களோட சாயல் மாறிட்டு வருது. எதிர்காலத்துல உண்மையான மக்களிசை பாடல்கள் எதுன்னு தெரியாம போயிடும். இவரோட பாடல்கள் கிராமத்து மக்களோட வாழ்க்கைய சொல்லக்கூடிய பாடல்கள். நம்ம கலாச்சாரத்துல நிறைய இருக்கு. நிறைய விட்டுட்டோம். இது ஒரு காலத்துல தேட வேண்டியதிருக்கும். என் கணவரோட நிறைய பாடல்கள் இன்னும் வெளிய வரல. அதெல்லாம் இனி ஒவ்வொன்னா வெளியேக் கொண்டு வருவோம் என்கிறார் அனிதா குப்புசாமி…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“