ஆப்பிள் ஐஓஎஸ் 11 இயங்கு தளம் செயல்பாட்டுக்கு வந்தது!

இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐஓஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டம் இன்று செயல்பாட்டுக்கு வந்தது.

ஆப்பிள் நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய புதிய பொருட்களை சந்தைப்படுத்தும் மாநாட்டை நடத்துகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சர்சதேச டெவலப்பர் மாநாடு, இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த டெவலெப்பர் மாநாட்டில் புதிய மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஐபோன் ஆப்ரேட்டிங் சிஸ்டம், வாட்ச் ஆப்ரேட்டிங் சிஸ்டம், புதிய சாப்ட்வேர்கள், ஐபேட் புரோ, ஹோம்பேட் என பல்வேறு தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இந்த நிலையில், ஐஓஸ் 11 (பீட்டா)ஆபரேட்டிங் சிஸ்டம் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்படி ஐஓஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டத்தை, பயனர்கள் இன்று முதல் டவுண்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரே ஐடியை பயன்படுத்தி ஐமெசேஜ்களை அனுப்பிக்கொள்ளும் வகையில் ஐஓஎஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஐஓஎஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டமானது, 5எஸ் மற்றும் அதற்கு மேம்பட் ஐபோன், ஐபேட் 5-வது தலைமுறை மற்றும் அதற்கு மேலுள்ளவை மற்றும் ஐபாட் டச் 6-ம் தலைமுறை ஆகியவற்றில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ஐஓஎஸ் 11, பீட்டா வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதனால் சில சமயங்களில் ஃக்ரேஷ் மற்றும் பேட்டரியின் திறனில் மாறுபாடு ஏற்பாடலாம்.

எனவே, முதன்மையாக பயன்பாட்டில் வைத்திருக்கும் சாதனத்தில் ஐஓஎஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தாமல், மாற்றாக உள்ள சாதனங்களில் ஐஓஎஸ் 11-யை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆப்பிள் ஐஓஎஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சாதனத்தில் பெற வேண்டுமானால், பயனர்கள் தங்களது ஆப்பிள் ஐடி-யை கொண்டு முதலில் beta.apple.com-என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முழுமையான கணக்கு தொடங்கியவுடன், ஐஓஎஸ் 11 பெற தகுதியான சாதனத்தை எடுத்துக் கொண்டு சபாரி ப்ரவுசரில் beta.apple.com/profile என்ற பக்கத்திற்கு செல்லவும்.மீண்டும் கணக்கு துவங்குவது குறித்து அங்கு கேள்விகள் இருக்கும். ஏற்கெனவே கணக்கு தொடங்கியிருப்பதால், புதிதாக தொடங்க தேவையில்லை. தற்போது, ஐஓஎஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

ஐஎஸ்ஓ 11 – இன்ஸ்டால் செய்யும் முன்னல் தேவையான கோப்புகளை பேக்-அப் எடுத்துக் கொள்ளவது அவசியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

×Close
×Close