யாருக்குமே புடிக்காம இருந்த என்ன உனக்கு மட்டும் எப்படி புடிச்சது.. நிஷா எமோஷனல்

அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார்.

அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார்.

author-image
abhisudha
New Update
Aranthangi Nisha

Aranthangi Nisha

விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர். அந்தவகையில் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார்.

Advertisment

தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் நிஷா சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.

ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

இப்போது நிஷாவுக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிய நிலையில், சிறு வயதில் தன் கணவனுடன் சேர்ந்து எடுத்த படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அதில் எமோஷனலாக எழுதியுள்ளார்.

Advertisment
Advertisements

அதில், “அன்றிலிருந்து இன்று வரை என் வெற்றி என் தோல்வி, என் சந்தோஷம், என் துக்கம், என் நண்பன், என் கணவன், என் காதலன் எல்லாமாக நீ மட்டும் தான் இருக்கிறாய், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள் எல்லாரும் சொல்லுவாங்க, ஆனால் என்னுடைய வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருக்கிறான் என்று சொல்றதுக்கு எனக்கு பெருமையா இருக்கு, எத்தனையோ விமர்சனங்கள் எனக்காக நீ தாங்கிக் கொண்டாய் யார் என்ன சொன்னாலும் நீங்க சொல்ற ஒரே வார்த்தை எதையும் கண்டுக்காம போ கண்டிப்பா நீ ஜெயிப்ப, இந்த ஒரு வார்த்தை தான் இப்ப வரைக்கும் நான் ஓட்டுவதற்கு காரணம். கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆகுது நம்பவே முடியல யாருக்குமே புடிக்காம இருந்த என்ன உனக்கு மட்டும் எப்படி புடிச்சுசு, என் வாழ்நாள் மூச்சு இருக்கிற வரைக்கும் எந்த நேரத்திலும் உங்களை கஷ்டப்படாம சந்தோஷமா பாத்துப்பேன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தங்கம்........

இப்படி நிஷா தன் கணவனுக்கு அன்பு தெரிவித்து எமோஷனலாக எழுதியுள்ளார். அதைப் பார்த்த பலரும் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நிஷா ஃபேமிலி போட்டோஸ் இங்கே..

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: