விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். மற்ற டிவி சேனல்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியில் வரும் காமெடியன்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர். அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
Advertisment
அந்தவகையில் ரசிகர்களை பொறுத்தவரை கலக்க போவது யாரு சீசன் 5 மிகவும் ஸ்பெஷல். இதில் தான் அறந்தாங்கி நிஷா- பழனி காம்போ, சரத்- தீனா காம்போ, முல்லை-கோதண்டம் காம்போ, குரேஷி என ஒரு காமெடியன் பட்டாளமே ரசிகர்களை வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைத்தது.
இன்று சுந்தரி சீரியலில் நடித்து பிரபலமான கேப்ரியல்லாவும் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக இருந்தவர் தான்.
சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் விஜய் டிவி காமெடியன்கள் ஜொலித்து வருகின்றனர். அத்துடன் வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கூட கலந்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
சமீபத்தில் கூட அறந்தாங்கி நிஷா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மலேஷியா நாட்டுக்கு சென்றிருந்தார். இப்போது நிஷா, குரேஷி, புகழ் துபாய் நாட்டுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்த படங்களை நிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோஸ் இங்கே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“