கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தவர் அறந்தாங்கி நிஷா. தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். நிஷாவுக்கு அஷ்ரத் என்ற மகனும், சஃப்ரா என்ற மகளும் உள்ளனர்.
ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷூட்டிங்கின் போது எடுத்த படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
இன்று ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஜெயிலர் பட டிரெய்லர் டிஸ்கிரிப்ஷனில் உள்ள ஸ்கிரின்ஷாட்டை நிஷா இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். அதில் ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷணன் போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் பெயருடன் நிஷா பெயரும் உள்ளது.
அந்த பதிவில் ”Thank u so much Nelson sir, இந்த இடத்துல என்னோட பேர் இருக்கிறது பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, அறந்தாங்கியில் இருந்து நான் திரை உலகத்துக்கு போகும்போது என்ன நம்புன என்னோட நண்பர்களுக்கும், என் குடும்பத்துக்கும் நன்றி…
எனக்கு எப்பவுமே என்னோட ஊர் பிடிக்கும். இந்த இடத்தில் அறந்தாங்கி நிஷா என்று பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு, ஒரு கிராமத்தில் இருந்து கிளம்பும்போது நிறைய விமர்சனங்கள் இப்ப வரைக்கும் அது வந்துட்டு தான் இருக்கு…
ஆனா ஒன்னு மட்டும் நம்ம எந்த இடத்துக்கு வேணாலும் போலாம். ஆனால் அந்த துறைய நம்ம உண்மையா காதலிக்கணும். அப்படி காதலிச்சா கண்டிப்பா நமக்கு நல்லதே நடக்கும். நம்ம வேலைக்கு நம்ம உண்மையா இருந்தா நம்ம வேலை நம்மள கண்டிப்பா நல்லா பாத்துக்கும்.
எப்பவுமே என் கூட நிக்கிற என்னுடைய ஊர் நண்பர்கள், திரையுலக நண்பர்கள், என்னோட குடும்பம் ,என்னுடைய பட்டிமன்ற நண்பர்கள், என்னுடைய சமூக வலைதள நண்பர்கள், எல்லாருக்கும் நன்றி அப்புறம் முக்கியமா என்ன விமர்சனம் செய்ற அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.... நெல்சன் திலிப்குமார் சன் பிக்சர்ஸ் சன் டி.வி.” என்று நிஷா உணர்வுப்பூர்வமாக அதில் எழுதியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்க ஆச்சி மனோரமா, கோவை சரளா மாதிரி சாதிக்கணும், அதை நாங்க பாக்கணும்… நீங்க மென்மேலும் வளர வாழ்த்துகள் என கமென்டில் வாழ்த்தி வருகின்றனர்….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“