அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார். நிஷாவுக்கு. அஷ்ரத் என்ற மகனும், சஃப்ரா என்ற மகளும் உள்ளனர்.
Advertisment
ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
சில மாதங்களுக்கு முன்பு கூட நிஷா 12வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, சிறு வயதில் தன் கணவனுடன் சேர்ந்து எடுத்த படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதில், அன்றிலிருந்து இன்று வரை என் வெற்றி என் தோல்வி, என் சந்தோஷம், என் துக்கம், என் நண்பன், என் கணவன், என் காதலன் எல்லாமாக நீ மட்டும் தான் இருக்கிறாய், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள் எல்லாரும் சொல்லுவாங்க, ஆனால் என்னுடைய வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருக்கிறான் என்று சொல்றதுக்கு எனக்கு பெருமையா இருக்கு, எத்தனையோ விமர்சனங்கள் எனக்காக நீ தாங்கிக் கொண்டாய் யார் என்ன சொன்னாலும் நீங்க சொல்ற ஒரே வார்த்தை எதையும் கண்டுக்காம போ கண்டிப்பா நீ ஜெயிப்ப, இந்த ஒரு வார்த்தை தான் இப்ப வரைக்கும் நான் ஓட்டுவதற்கு காரணம். கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆகுது நம்பவே முடியல யாருக்குமே புடிக்காம இருந்த என்ன உனக்கு மட்டும் எப்படி புடிச்சுசு, என் வாழ்நாள் மூச்சு இருக்கிற வரைக்கும் எந்த நேரத்திலும் உங்களை கஷ்டப்படாம சந்தோஷமா பாத்துப்பேன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தங்கம்…….. என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இப்போது மீண்டும் தன் கணவன் உடன் இருக்கும் படத்தை நிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அதில், ”என் வாழ்க்கையில் நான் கஷ்டப்படும் போது எல்லாம் திரும்பி பார்க்கும் போது நான் இருக்கேன் தங்கம் எதுக்கும் கஷ்டப்படாத, நீங்க சொல்ற அந்த ஒரு வார்த்தை, என் வாழ்க்கையில் அடுத்த வெற்றியை நோக்கி ஓடுறதுக்கு ஊக்கமா இருக்கும், நன்றி என் தங்கமே! என்று எமோஷனலாக எழுதியுள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் ரியாஸ் போன்ற ஒரு மாமா உங்களுக்கு கிடைத்ததற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சூப்பர் தூக்குதுரை மாமா என்று வாழ்த்தி கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“