விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர்.
அந்தவகையில் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.
ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்
அப்படி நிஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த போஸ்ட், இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையும் ஒன்று. இதுவரை 3 சீசன்கள் முடிந்து இப்போது 4வது சீசன் நடந்து முடிந்தது. மாகாபாவும், அறந்தாங்கி நிஷாவும் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
அப்போது மாகாபா உடன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய போது எடுத்த படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த நிஷா அதில்; ரொம்ப நன்றி மா காப்பா MMC la ஒரு ஆங்கரா உங்க கூட பயணித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது ஒரு இடத்துல கூட நீங்க என்ன விட்டு கொடுத்ததே இல்லை, நீங்க யாரையுமே விட்டுக் கொடுத்ததில்லை, இன்னைக்கு எல்லாருக்கும் என்ன ஒரு ஆங்கரா புடிச்சிருக்குன்னா அதுக்கு நீங்களும் ஒரு காரணம், எனக்கு தெரியாத நிறைய விஷயங்களை நீங்கள் மேடையில் சொல்லிக் கொடுத்தீங்க, ரொம்ப நன்றி மா காப்பா உங்களோடு பழகுனதுலையும் நீங்க எனக்கு நண்பனா கிடைச்சதிலும் நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் இந்த நிகழ்ச்சி எனக்கு நம்பி கொடுத்த ருஃபா மேம், பிரதிமா அக்கா, மு சார், முத்துபாண்டி, சேட்டா, ரொம்ப நன்றி. நடுவர்கள் கோபிநாத் அண்ணா, தேவதர்ஷினி மேம் என்ன ரொம்ப ஊக்கப்படுத்தினீங்க உங்களுக்கு ரொம்ப நன்றி கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களுக்கும் நன்றி....
இவ்வாறு நிஷா மனமுருகி அந்த பதிவில் மாகாபாவுக்கு நன்றி கூறியுள்ளார். ஏற்கெனவே மாகாபா அமைதியாக பலருக்கு உதவி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பிரியாங்கா, கலக்க போவது யாரு பாலா என பலரும் இதை மேடையில் சொல்லி, மாகாபாவுக்கு நன்றி கூறியுள்ளனர்.
இப்போது நிஷாவும் மாகாபாவை புகழ்ந்து பகிர்ந்த இந்த பதிவு அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் மரியாதையை மேலும் உயர்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“