Advertisment

எத்தனையோ வீடியோவ பாத்துட்டு கடந்து போய் இருக்கேன், ஆனா.. விவசாயிக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிஷா

எத்தனையோ வீடியோவ பாத்துட்டு கடந்து போய் இருக்கேன், ஆனா இந்த வீடியோவை பார்த்துவிட்டு என்னால கடந்து போகவே முடியல- நிஷா எமோஷனல்

author-image
abhisudha
New Update
Aranthangi Nisha

Aranthangi Nisha

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தவர் அறந்தாங்கி நிஷா. தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.

Advertisment

சீரியல், ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி நிஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு வீடியோதான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொப்பூரில் சாம்பந்தி பூக்களை விவசாயம் செய்யும் ஒரு முதியவரின் வீடியோதான் அது. கடன் வாங்கி, சாம்பந்தி பூ நாற்று வாங்கி அவர் விவசாயம் செய்து வந்திருக்கிறார். ஆனால், நோய் தாக்குதலால், செடிகள் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த தோட்டமே நாசக்காடாகி விட்டது. இதனால் கனத்த இதயத்துடன் டிராக்டர் கொண்டு அனைத்து செடிகளையும் அழித்து விட்டார்.

அந்த வீடியோவைதான் நிஷா இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். அதில், எத்தனையோ வீடியோவ பாத்துட்டு கடந்து போய் இருக்கேன், ஆனா இந்த வீடியோவை பார்த்துவிட்டு என்னால கடந்து போகவே முடியல, 72 வயதிலும் உழைப்பையும் இந்த மண்ணையும் நம்பிய ஒரு விவசாயினுடைய கண்ணீரை அவ்வளவு எளிதாய் என்னால கடக்க முடியல, ஒரு படைப்பாளிக்கு மட்டும் தான் தெரியும் தன்னுடைய படைப்பு அழிந்து போகும் போது அது எந்த அளவுக்கு வலிக்கும், ஆனா ஒரு பார்வையாளரா என்னால அதை உணரவும் முடியுது, அரசாங்கமும் அரசு நினைச்சா இந்த வயதானவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியும், தன்னோட படைப்புக்கு ராயல் டி கேட்க உரிமை இருந்தா இந்த உலகத்திலேயே முதல் பணக்காரன் விவசாயி தான்..... நம்மால முடிஞ்சதையும் பண்ணுவோம் என்று கூறி, உதயநிதி ஸ்டாலினையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் நிஷா அந்த பதிவில் டேக் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஒருவர்; இது எங்க ஊருதாங்க. எங்க ஊருல ஒரு வகையனா பூச்சி கண்ணுக்கே தெரியாத அளவு பூச்சி. அதுதாங்க இந்த மாதிரி பூக்கள நாசம் பண்ணுது. இதுனால பெரிய அளவுக்கு நஷ்டம் வருதுங்க என்று கூறியிருக்கிறார்.

இதைப் பார்த்த மேலும் சிலர், இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு கண்டு அவருடைய விவசாய கடனை ரத்து செய்தும், அவருக்கு இழப்பீடு வழங்கவும் உதவிட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment