கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தவர் அறந்தாங்கி நிஷா. தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். நிஷாவுக்கு. அஷ்ரத் என்ற மகனும், சஃப்ரா என்ற மகளும் உள்ளனர்.
ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
அப்படி நிஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம், இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் நிஷா, தன் மகளுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மகளே, என் வாழ்க்கையில் அர்த்தம் தந்தவள் நீ, எனக்கு இன்னொரு தாயும் நீ, வாழ்க்கையில் எல்லா செல்வமும் பெற்று நீ வாழ்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் தங்கமே…. என நிஷா அதில் பதிவிட்டுள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் நிஷாவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
நிஷா மகள் கியூட் போட்டோஸ் இங்கே…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“