காமெடி டைம் அர்ச்சனா என்றால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.
Advertisment
சின்னத்திரை மட்டுமல்ல, வெள்ளித் திரையிலும் அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து நடித்த டாக்டர் படம் வசூலை வாரிக் குவித்தது. அர்ச்சனா Wow Life எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் இவரது ஹோம் டூர், கிச்சன் டூர், ஃபிரிட்ஜ் டூர் வீடியோக்கள் மிகவும் பிரபலம்.
அர்ச்சனாவுக்கு அனிதா என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவருக்கு ஆர்யன் என்ற ஆண்குழந்தை உள்ளது. அர்ச்சனா, அனிதா, சாரா மூவரும் குட்டிக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி தங்கள் இன்ஸ்டாகிராமிலும், யூடியூப் பக்கத்திலும் பகிர்வார்கள்.
Advertisment
Advertisements
அர்ச்சனா இன்ஸ்டாகிராமில், அனிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்த ஒரு வீடியோதான் இப்போது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த அர்ச்சனா அதில், என் உயிருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!
குழந்தை பருவத்திலிருந்தே, நாம் ஒன்றாக சில சிறந்த தருணங்களை அனுபவித்திருக்கிறோம், சில பெரிய போராட்டங்களில் ஈடுபட்டு நாம் இருக்கும் இடத்திற்கு வந்தோம்!! எல்லா நேரத்திலும், நீ எப்போதும் என்னிடம் சொல்லியிருக்கிறாய், நான் எப்பொழுதும் இருக்கிறேன் என்று!!
நிபந்தனையின்றி எனக்காக இருந்ததற்கு நன்றி!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராக்ஸ்டார்!! இந்த வருடம் சிறப்பாக அமையட்டும்!! என்று அதில் உருக்கமாக எழுதி உள்ளார்.
அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“