scorecardresearch

3-வது சந்திப்பில் லவ் ப்ரபோஸ்; பேங்க் பேலன்ஸ் பார்த்து கல்யாணம்… அர்ச்சனா லவ் ஸ்டோரி

20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார்.

3-வது சந்திப்பில் லவ் ப்ரபோஸ்; பேங்க் பேலன்ஸ் பார்த்து கல்யாணம்… அர்ச்சனா லவ் ஸ்டோரி
Archana Chandoke Love story

காமெடி டைம் அர்ச்சனா என்றால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.

அர்ச்சனா Wow Life எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் இவரது ஹோம் டூர், கிச்சன் டூர், ஃபிரிட்ஜ் டூர் வீடியோக்கள் மிகவும் பிரபலம்.

அர்ச்சனாவுக்கு திருமணம் முடிந்து 17 ஆண்டுகளை கடந்து நிலையில், அவர் முதல்முறையாக தனது காதல் கதையை யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

அம்மா, அப்பாவோட காதல் கதைய கேட்கிறது எத்தனை குழந்தைங்களுக்கு கிடைக்கும் தெரியாது. ஆனா, எனக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. அம்மா உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க என சாரா கேட்க அர்ச்சனா தன்னோட பழைய நியாபகங்களுக்கு செல்கிறார்.

வினோத் எனக்கு ஸ்கூல் படிக்கும்போது இருந்து ஃபிரெண்டு, அவரோட அண்ணன் தான் வினித. வினோத் லீவுல சென்னைக்கு வரும் போதெல்லாம் என்னை வந்து பாத்துட்டு போவாரு.. 2002 அக்டோபர்ல வினோத் ஒரு விடுமுறையில என்னை பார்க்க வந்தாரு. அவருக்கூட வினித்தும் வந்தாரு.

வினித் வீட்டுக்கு வரும் போது வொயிட் ஷர்ட், பிரெளன் பேண்ட் போட்டுருந்தாரு. ரொம்ப சின்சியரா காஃபி, பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டு இருந்தாங்க. அப்போ இளமை புதுமை ஷூட்டுக்கு நான் அவசரமா கிளம்பிட்டு இருந்தேன். நானும் வினோத்தும் ஒரு 3 நிமிஷம் தான் பேசினோம்.

நான், வினித்கிட்ட உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம், கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, உங்க கல்யாணத்துக்கு கூப்பிடுங்கனு சொல்லிட்டு போயிட்டேன். அதுல இருந்து 3வது நாள் வினித் பிறந்தநாள், அப்போ வினோத் எனக்கு கால் பண்ணி இன்னைக்கு என் அண்ணனுக்கு பிறந்தநாள், நீ விஷ் பண்ணு சொன்னான்.

நானும் வினித்க்கு கால் பண்ணி பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னேன். அப்போ அவரு விசாகப்பட்டினம்ல இருந்தாரு. அப்படியே சும்மா பேச ஆரம்பிச்சதுதான், நவம்பர் 7ல வினித்கிட்ட எனக்கு ஒரு லெட்டர் வந்தது. அதுல நான் சென்னைக்கு வந்தா உங்களை பாக்க ஆசைப்படுறேன்னு, நான் இந்த லெட்டரை எழுதியிருக்கிறதை வினோத்கிட்ட சொல்லிடாதேன்னு எழுதியிருந்தாரு.

உடனே நான் வினோத்துக்கு போன் பண்ணி என்னடா உங்க அண்ணன் இப்படிலாம் லட்டர் எழுதுறாரு சொன்னேன். அவனும் அப்படியா உனக்கு லெட்டர் எழுதியிருக்கானா கேட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டான்.

டிசம்பர்ல எனக்கு விசாகப்பட்டினம்ல ஒரு ஷோ இருந்தது, அப்போதான் அங்க கடற்படை நிகழ்ச்சியும் நடக்குது. அங்க நான் வினித் பாக்கும்போது அவரு எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கனும் ஆசையா இருக்கு சொல்லிட்டார்.

நான், எனக்கு தெரியாது, நீங்க வேணா என் வீட்டுல பேசுங்கனு சொல்லிட்டேன். அப்போ கவர்மெண்ட் வேலை ரொம்ப ஃபேமஸ். வினித் அவரோட சம்பிளம் ரசீது, பேங்க பேலன்ஸ் எல்லாம் வீட்டுல காட்டுனாரு, அவரு அக்கவுண்ட்ல 108 ரூபாய்தான் இருந்தது. அதெல்லாம் பாத்துட்டு வீட்டுல கட்டிக் கொடுக்குறேன் சொல்லிட்டாங்க, அப்போ நான் எம்.ஏ முதல் வருஷம் படிச்சுட்டு இருந்தேன். இவ்வளவு சீக்கிரம் கல்யாணமா கேட்க, இல்ல இப்போ நிச்சயதார்த்தம் பண்ணிடலாம் சொல்லி 2003 மார்ச்ல நிச்சயதார்த்தம் நடந்தது.

2004 மே மாதம் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு.. நடுவுல 14 மாதம். எங்களோடது லாங் டிஸ்டென்ஸ் ரிலேஷன்ஷிப். காபி ஷாப் போறது, லாங் டிரைவ் போறது, பீச், அவுட்டிங் இப்படி எதுவுமே எங்களுக்கு நடக்கல. அப்போ எஸ்டிடி கால் ரொம்ப காஸ்ட்லி. ஒரு நிமிஷத்துக்கு 13 ரூபாய் வரும். அதுனால போன் கூட பேச முடியாது. வினித் எனக்கு லெட்டர் அதிகமா எழுதுனாரு. நடுவுல கால் உடைச்சிட்டாரு. அப்போ நான் தான் அவரை பாத்துக்கிட்டேன். இந்த 14 மாசத்துல நாங்க ஒருத்தர் ஒருத்தர் நல்ல தெரிஞ்சுகிட்டோம்.

வினித் சவுத் இந்தியன், நான் பஞ்சாபி. நாங்க ரெண்டு பேரும் ஆர்ய சமாஜ் ஸ்டைல கல்யாணம் பண்ணோம். இப்போ மாதிரி அப்போ எந்த செலிபிரிட்டிஸூம் கல்யாணத்துக்கு வரமாட்டாங்க. என் கல்யாணத்துக்கு சிட்டி பாபு வந்தாரு. காமெடி டைம் பண்றதுல இருந்து எனக்கு அவங்கள நல்ல தெரியும். ஒரு அண்ணனா எனக்கு செய்ய வேண்டிய எல்லாம் செய்ஞ்சாங்க. ஒரு டைமண்ட் நெக்லெஸ் வாங்கி கொடுத்தாங்க. வானிலை மோனிகா வந்தாங்க. சன் டிவியில இருந்து எனக்கு கிரைண்டர் கிஃப்ட் கொடுத்தாங்க.

இந்த 17 வருஷத்துல நாங்க நிறைய கத்துக்கிட்டோம். நான் ரொம்ப அமைதியான பொண்ணு. என் குரல் கூட வீட்டுல கேட்காது. நான் அப்படித்தான் வளர்ந்தேன். திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டாங்க, இனி நீதான் குடும்பத்தை பாத்துக்கணும் சொல்லும்போது நம்ம ஸ்ட்ராங்கா ஆகுறது இயல்பு.

நானும் ஸ்ட்ராங், வினித்தும் ஸ்ட்ராங். இந்த  மாதிரி இருக்கிறவங்களுக்குள்ள நிறைய சச்சரவு வரும். எங்க ரெண்டு பேருக்கும் நிறைய சண்டை நடக்கும். ஆனா அதையும் தாண்டி நாங்க ஒன்னாதான் இருப்போம். இதைத்தான் நாங்க இந்த 17 வருஷத்துல கத்துக்கிட்டோம் என இப்படி நிறைய விஷயங்களை அர்ச்சனா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்,

இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Archana chandhoke love story zaara vineet

Best of Express