சென்னையில் பிறந்து வளர்ந்து அர்ச்சனா குமார், சென்னை பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில், பட்டப்படிப்பை முடித்தார்.
கல்லூரியில் படிக்கும்போது அர்ச்சனா, மீடியா மற்றும் நடனம் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதன்மூலம், ஜீ தமிழ் டிவியில், ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். அதில் சீரியல் நடிகர் சித்தார்த் குமாருடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இந்த நிகழ்ச்சி மூலம் அர்ச்சனா மீடியா உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். டான்ஸ் ஜோடி டான்ஸ் அர்ச்சனாவுக்கு நல்ல பெயரை தேடித் தந்தது.
அதன்பிறகு அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில், தேனு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் அர்ச்சனாவுக்கு நிறைய ரசிகர்களை தேடித் தந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ராஜா, கலக்கல் ராணி ரியாலிட்டி ஷோவிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் ஜெயச்சந்திரனுடன் ஜோடி சேர்ந்து, காமெடியிலும் அட்டகாசம் செய்தார்.
அர்ச்சனா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அதில் தொடர்ந்து புகைப்படங்கள், ரீல்ஸ், போட்டோஷூட்களை பதிவிட்டு கொண்டே இருப்பார். குறிப்பாக அர்ச்சனாவின் சுருட்டை முடிக்காகவே, இணையத்தில் பலரும் இவரை தேடி தேடி பார்க்கின்றனர்.
அர்ச்சனாவுக்கு முதல் தோழி என்றால் அவரது அம்மா தான். அவர் இன்றுவரை தனது அம்மாவை வாடி, போடி என்று தான் கூப்பிடுகிறார்.
அர்ச்சனா இன்று பெரியளவில் புகழடைந்தாலும், அதற்கு பின்னாடி ஒரு பெரிய வலி இருக்கிறது. இவருக்கு 13 வயது இருக்கும்போது ஒரு நடனப்போட்டியில் பங்கேற்று ஆடியிருக்கிறார். அப்போது அங்கிருந்த சிலர், நீ நன்றாக ஆடவில்லை… உனக்கு ஆடவே தெரியவில்லை என மேடையை விட்டு கீழே இறக்கினர். இந்த சம்பவம் அவரது மனதை மிகவும் பாதித்தது. அப்போது தான், அர்ச்சனாவுக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அதற்காக அவர் நடன வகுப்பில் சேர்ந்து முறைப்படி நடனத்தை கற்றார். எல்லா திறமையும் வளர்த்து கொண்ட பிறகுதான் அவர், மீடியா உலகிலே நுழைந்தார்.
சிறிய வயதில் அவமானங்களை சந்தித்தால், இப்போது ஏதாவது ரசிகர்கள் பாராட்டி மெசெஜ் அனுப்பினாலும் அர்ச்சனா அதற்கு பதிலளிக்கிறார். அதனாலேயே இவரை நிறைய ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“