Advertisment

நாம் என்ன சம்பாதித்தாலும், எவ்வளவு புகழ் இருந்தாலும்.. ஆஷா கவுடா அட்வைஸ்

ஆஷா, ஒரு ஆங்கில தொலைக்காட்சி உடனான பிரத்யேக உரையாடலில்,” ஏரோபிக்ஸ் பயிற்சியாளராக இருந்து நடிகையாக மாறிய தனது பயணம்” குறித்து பகிர்ந்து கொண்டார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asha Gowda

Asha Gowda

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை சீரியலில், அர்ஜூனின் மனைவியாக வசுவாக நடித்தவர் ஆஷா கவுடா. இவர் தனது அழகாலும், நடிப்பு திறமையாலும் பல ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டார்.

Advertisment

ஒருமுறை ஆஷா, ஒரு ஆங்கில தொலைக்காட்சி உடனான பிரத்யேக உரையாடலில்,” ஏரோபிக்ஸ் பயிற்சியாளராக இருந்து நடிகையாக மாறிய தனது பயணம்” குறித்து பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ’நடிப்பு என்பது எப்போதும் என்னுடைய முதல் தேர்வாக இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் நிறைய ஜிம் பயிற்சியாளர்கள் உள்ளனர். அதனால், ஜிம் ட்ரெய்னராக வேண்டும் என்று நினைத்து, சிறிது காலம் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகப் பணிபுரிந்தேன். எனது இன்ஸ்டாகிராமைப் பார்த்து, எனக்கு ஆடிஷனுக்கான அழைப்பு வந்தது. அது என்னை வசுந்திராவாக மாற்றியது,’ என்று அவர் கூறினார்.

வசுந்திராவாக தனக்கு கிடைத்த வரவேற்பை பற்றி ஆஷா கூறுகையில், “வசுந்தரா கதாபாத்திரம் எந்தளவுக்கு பிரபலம் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஒருமுறை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். கிராமத்தில் உள்ள அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடி விட்டனர். எங்கள் மீது அன்பைப் பொழிந்தனர். கிராம மக்கள் ‘வசு’வை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைப் போல நடத்தினார்கள்.

எங்களுக்காக சமைத்துக் கொடுத்தார்கள், எங்களை கவனித்துக் கொண்டார்கள். தமிழ் மக்களின் அன்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதைப் பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று ஆஷா மனம் நெகிழ்ந்தார்.

மேலும் அவர் பேசுகையில், உண்மையில், ரசிகர்களின் ஆதரவே என்னை இயக்குகிறது, ஒரு நடிகையாக, நான் எனது தொழிலில் கச்சிதமாக இருக்க கடினமாக முயற்சி செய்கிறேன்.  முன்பெல்லாம் எனக்கு மொழி பரிச்சயம் இல்லை. ஆனால் இப்போது மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எனது ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நான் அறிவுறுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் தங்களால் முடிந்தவரை நல்லது செய்ய வேண்டும், யாரையும் புண்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்று ஆஷா கூறினார்.

தினமும் யாராவது நம்மை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள். ​​​​நாம் என்ன சம்பாதித்தாலும், எவ்வளவு புகழும், பெயரும் இருந்தாலும் எல்லோரும் நம்மை விரைவில் மறந்துவிடுவார்கள். மற்றவர்களுக்காக சில நினைவுகளை மட்டும் தான் நாம் விட்டுச் செல்கிறோம். அதுதான் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம்.

எனவே நாம் உயிருடன் இருக்கும் வரை, பிறரை புண்படுத்தக் கூடாது என்று நான் நம்புகிறேன் என ஆஷா கவுடா அந்த பேட்டியில் கூறினார்.

எனவே நாம் உயிருடன் இருக்கும் வரை, பிறரை புண்படுத்தக் கூடாது என்று நான் நம்புகிறேன் என ஆஷா கவுடா அந்த பேட்டியில் கூறினார்.

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment