ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்து தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. கேரளாவைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே பொன் மகள் வந்தாள், மாயா சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் இவரை ஆயிஷா என்று சொல்வதை விட, ரெளடிபேபி என்று சொன்னால் குழந்தைகளுக்கு கூட தெரியும். அந்தளவுக்கு சத்யா சீரியலில் வரும் ரெளடிபேபி கேரெக்டர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒன்று. இப்போது ஆயிஷா விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஒருமுறை ஆயிஷா, தன்னுடைய லைஃப்ஸ்டைல் குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார்.
நான் எந்த சரும பராமரிப்பு வழக்கத்தையும் ஃபாலோ பண்ணமாட்டேன். ஏன்னா எனக்கு தெரியாது. நான் உறுப்படியா பண்ற ஒரே விஷயம். நைட் எவ்வளோ லேட்டா போனாலும் மேக்கப் ரிமூவ் பண்ணிருவேன். தேங்காய் எண்ணெய் எடுத்து, நல்லா முகத்துல தடவி ஃபேஷ் வாஷ் பண்ணிடுவேன்.
நான் பியூர் நான் வெஜிடேரியேன். காலையில, மதியம், நைட் 3 வேளையும் நான் வெஜ்தான் சாப்பாடுதான். பிறந்ததுல இருந்தே அப்படி பழகிட்டேன்.. என் உடம்புக்கு அது மட்டும்தான் செட் ஆகும். வெஜ் சாப்பாட்டுதான் எனக்கு அலர்ஜி ஆகுது..
முடி பராமரிப்பு பொருத்தவரைக்கும், வாரத்துக்கு ரெண்டு நாள் தலைக்கு குளிப்பேன். எனக்கு கிளியர் ஸ்கின்லாம் கிடையாது. ரொம்ப டார்க் சர்கிள்ஸ் இருக்கும். ஆனா, நான் ஃபேஷியலாம் பண்ணிக்க மாட்டேன். ஒரு தடவை நம்ம ஸ்கின்ல கை வச்சுட்டா அதை மெயிண்டேன் பண்ணனும், ஆனா நான் ரொம்ப சோம்பேறி. அதனால, நல்லா இருக்கிற சருமத்தை ஏதாவது பண்ணி, கெடுத்துக்க வேண்டாங்கிற பயத்துலதான் நான் எதுவுமே பண்ணல.
வீட்டுல இருக்கும் போது ஒரினல் கற்றாழை ஜெல் எடுத்து முகத்துக்கு போடுவேன். தயிர், காபி பவுடர் இல்ல காபி பவுடர், தேன் கலந்து முகத்துக்கு அப்ளை பண்ணுவேன். முகப்பரு வந்தா எதுவுமே செய்ய மாட்டேன். அதுவே போயிடும்.
முடிக்கு எதுவுமே பண்ணமாட்டேன். ஒரு ரெண்டு நாள் லீவு இருக்குனா, எண்ணெய் வச்சு குளிப்பேன். நல்லெண்ணெய், கருவேப்பிலை போட்டு வீட்டுலேயே எண்ணெய் பண்ணிக் கொடுப்பாங்க.. அதைத்தான் யூஸ் பண்ணுவேன்.
நான் சின்ன வயசுல இருந்தே ஒல்லிதான். என்ன சாப்பிட்டாலும் எனக்கு வெயிட் போடாது. இதுக்கு நடுவுல, வெயிட் ஏறனும்னு மெடிகேஷன்ஸ் எடுத்து, ஒரு 57 கிலோ வரை ஏறுனேன். அப்புறம் போலீஸ் யூனிஃபார்ம் போட்டு பாக்கும்போது எனக்கே காமெடியா இருந்தது. அதனால வெயிட் குறைச்சிட்டேன்.
வெயிட் போடும் போது ஒரு நாளைக்கு எட்டு தடவை சாப்பிடுவேன். அதை அப்படியே எப்போவும் போல 3 வேளைக்கு மாத்துனேன். வெயிட் குறைஞ்சிட்டு. மத்தபடி நான் எதுவுமே பண்ணல. ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடா இருந்தாக்கூட, எவ்ளோ முடியுமோ அவ்ளோதான் சாப்பிடுவேன்.
இவ்வாறு ஆயிஷா தன்னுடைய லைஃப்ஸ்டைல் குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“