Advertisment

அயோத்தியில் புதிய ராமர் கோயில் கும்பாபிஷேகம்- சரயு நதியில் நீராடி 'பஞ்சகவ்யா' எடுத்து சடங்குகள் ஆரம்பம்

செவ்வாய்கிழமையன்று, மிஸ்ரா மந்திரங்களை உச்சரித்து சரயு நதியில் நீராடி, பின்னர் 'பஞ்சகவ்யா' (பசுவின் பால், தயிர், நெய், கோபர் மற்றும் கௌமுத்ரா) எடுத்து விரதத்தைத் தொடங்கினார்.

author-image
abhisudha
New Update
Ayodhya

In Ayodhya, rituals begin for consecration of new Ram temple

அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சுமார் 11,000 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் பல்வேறு வகை இனிப்புகள் பிரசாதங்களாக அளிக்கப்பட உள்ளன.

Advertisment

இந்த நிலையில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு சடங்கு பூஜைகள் நேற்று (ஜன.16) தொடங்கின.

ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் அனைத்து சடங்குகளுக்கும் பிரதான் யஜ்மன் ஆஜ (pradhan yajman) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பலர் முன்னிலையில் முடிவடைகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய சடங்குகளைச் செய்யும் பூசாரிகளில் ஒருவரான அருண் தீட்சித், அனில் மிஸ்ரா பிரதான் யஜ்மன் ஆக (pradhan yajman) பரிந்துரைக்கப்பட்டார், என்பதை உறுதிப்படுத்தினார்.

மேலும் அடுத்த சில நாட்களில் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வார். தீட்சித்தின் தந்தை, வாரணாசியைச் சேர்ந்த லக்ஷ்மிகாந்த் தீட்சித், சடங்குகளின் தலைமைப் பூசாரியாக உள்ளார்.

செவ்வாய்கிழமையன்று, மிஸ்ரா மந்திரங்களை உச்சரித்து சரயு நதியில் நீராடி, பின்னர் 'பஞ்சகவ்யா' (பசுவின் பால், தயிர், நெய், கோபர் மற்றும் கௌமுத்ரா) எடுத்து உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.       

பின்னர் கோயிலின் கருவறையில் நிறுவுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை ராமர் சிலையை சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய இடத்தில் சுமார் எட்டு மணி நேரம் நடந்த பிரச்சிதா’, ‘சங்கல்பமற்றும் கர்மகுதிபூஜைகளை செய்தார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, 'பிரச்சிதா' மற்றும் 'சங்கல்ப' பூஜைகள் பரிகாரம் செய்வதற்கான சடங்குகளின் ஒரு பகுதியாகும். சிலை வடிக்கும் போது ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதற்கு மன்னிப்பு தேடுவதே கர்மகுதிபூஜை என்றார்கள்.

மிஸ்ராவும் அவரது மனைவியும் இணைந்து ஹவனம்செய்தபோது, ​​சிற்பி யோகிராஜும் உடன் இருந்தார். பின்னர் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் முடியும் வரை, மீதமுள்ள சடங்குகளுக்காக சிலையின் கண்கள் ஒரு துணியால் மூடப்பட்ட பிறகு, நெய் மற்றும் தேன் வழங்கப்பட்டது.

இன்று பூஜை விதி (சடங்குகள்) ஆரம்பம். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12:20 மணிக்கு பிரான் பிரதிஷ்டா சடங்குகள் நிறைவடையும்என்று மிஸ்ரா, சடங்குகளின் தொடக்கத்தில் சரயு நதியில் நீராடிய பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

அனுஷ்தான் (சடங்கு) தொடங்கப்பட்டு, கும்பாபிஷேக நாளான ஜனவரி 22 வரை தொடரும். 11 பூசாரிகள் அனைத்து கடவுள்களையும் தெய்வங்களையும் அழைக்கும் சடங்குகளை செய்கிறார்கள், ”என்று ராமர் கோவில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் கூறினார்.

புதன்கிழமை, சடங்குகளில் 'தீர்த் பூஜை', 'ஜல யாத்திரை' மற்றும் 'கந்தாதிவாஸ்' ஆகியவை அடங்கும்.

Read in English: In Ayodhya, rituals begin for consecration of new Ram temple

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ayodhya Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment