வேப்ப இலை, மஞ்சள்! வீட்டுக்குள் வைரஸ் வராமல் தடுக்க ஆயுர்வேத தீர்வு

ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிடைசர், ஏர் பியூரிஃபையர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எளிதில் கிடைக்கக்கூடிய ஆயுர்வேத பொருட்களைப் பயன்படுத்தலாம்.

ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிடைசர், ஏர் பியூரிஃபையர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எளிதில் கிடைக்கக்கூடிய ஆயுர்வேத பொருட்களைப் பயன்படுத்தலாம்.

author-image
abhisudha
New Update
lifestyle

Ayurveda ingredients to purify air

உங்களுக்கு தெரியுமா? உண்மையில் பியூரிஃபையர் இல்லாமலே உங்கள் அறையில் காற்றை சுத்தப்படுத்தலாம். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஆயுர்வேத சக்தி மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. உங்களுக்கு தேவையானது புதிய வேப்ப இலைகள் மற்றும் சிறிது மஞ்சள். வீட்டில் இருக்கும்போது கைகளை சுத்தப்படுத்த திறம்பட பயன்படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பு இது!

Advertisment

வேப்ப இலை மற்றும் மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது?

வேப்ப இலைகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும். இப்போது கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி நன்றாக கலக்கவும். காற்றை சுத்திகரிக்க இந்த கிண்ணத்தை உங்கள் அறையில் வைக்கலாம். உங்கள் கைகளை சுத்தப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.

வேப்ப இலைகள்’ தூசித் துகள்களைப் பிடிக்கும் மற்றும் வாயு மாசுகளை உறிஞ்சும் நேச்சுரல் ஏர் ஃபில்டர்ஸ் என்று அறியப்படுகிறது.

Advertisment
Advertisements
publive-image
மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

ஓரு பெரிய வேப்பமரம், அதிகபட்ச கார்பன் –டை-ஆக்ஸைடு நிலைப்படுத்தலுக்கு உதவுகிறது மற்றும் சல்ஃபர்- டை- ஆக்ஸைடு  போன்ற மற்ற மாசு கூறுகளுக்கு எதிராக ஒரு கவசத்தை வழங்குகிறது. கூடுதலாக, இது பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

மறுபுறம், மஞ்சளில் குர்குமினுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சுவாச மண்டலத்தை விடுவிக்கிறது மற்றும் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வைரஸ் தொற்றுகள் வராமல் தடுக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: