அசிடிட்டி என்பது பலரை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்னை, சிலருக்கு இது அன்றாடம் இருக்கும். உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால், அசிடிட்டியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆயுர்வேத நிபுணர் திக்ஸா பாவ்ஸர், இன்ஸ்டாகிராமில் அசிடிட்டி மற்றும் அஜீரணத்தைத் தடுக்க உதவும் மருந்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் படி அதைத் தடுப்பதாகும். ‘குணப்படுத்துவதை விட தடுப்பது சிறந்தது’ என்று சொல்வது போல், எல்லா காரணங்களையும் தடுக்க முயற்சிப்பது எப்போதும் நல்லது, என்று அவர் கூறினார்.
மருத்துவர் பாவ்சர் பரிந்துரைத்த ஆயுர்வேத வைத்தியம் இங்கே:
உங்கள் உணவில் அதிகப்படியான காரமான, புளிப்பு, உப்பு, புளித்த, வறுத்த மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை சாப்பிட முயற்சிக்கவும்.
அதிகமாக சாப்பிட வேண்டாம். கொஞ்சமான உணவை நீங்களே பரிமாறி சாப்பிடுங்கள். புளிப்பு பழங்களிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
உணவை, குறிப்பாக மதிய உணவைத் தவிர்க்க வேண்டாம். நேரம் தவறிய, ஒழுங்கற்ற உணவைத் தவிர்க்கவும், இரவு உணவை முன்கூட்டியே சாப்பிட முயற்சிக்கவும். அதிகப்படியான பூண்டு, உப்பு, எண்ணெய், மிளகாய் போன்றவற்றைக் கொண்ட உணவுகளை அடிக்கடி தவிர்க்கவும். அசைவ உணவையும் தவிர்ப்பது நல்லது.
உணவு உண்ட உடனேயே படுத்துக் கொள்வதையும், படுத்த நிலையில் இருப்பதையும் தவிர்க்கவும்.
புகைபிடித்தல், மது, தேநீர், காபி மற்றும் ஆஸ்பிரின் வகை மருந்துகளை தவிர்க்கவும்.
மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்கவும்.
அஜீரணம் மற்றும் அசிடிட்டியை தடுக்க சில ஆயுர்வேத உணவுப் பழக்கங்களையும் மருத்துவர் பாவ்சர் பரிந்துரைத்தார். அவை:
கொத்தமல்லி தண்ணீர் குடிக்கவும்.
உணவுக்குப் பிறகு அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை மென்று சாப்பிடுங்கள்.
காலையில் இளநீரை முதலில் குடியுங்கள்.
மதியம் பெருஞ்சீரகம் சாறு குடிக்கவும். இனிப்புக்காக கற்கண்டு சேர்க்கலாம்.
உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவும்.
உறங்கும் போது 1 டீஸ்பூன் பசு நெய்யுடன், வெதுவெதுப்பான பால் சாப்பிடவும்.
ரோஸ் வாட்டர் மற்றும் புதினா வாட்டர் குடிப்பது குளிர்ச்சியாக இருப்பதோடு, செரிமானத்திற்கும் உதவும்.
இனிப்பு மாதுளை, வாழைப்பழங்கள், ஸ்டூவ்டு ஆப்பிள், பிளம்ஸ், திராட்சை, ஆப்ரிகாட், தேங்காய் போன்ற பருவகால பழங்களை சாப்பிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“