/tamil-ie/media/media_files/uploads/2023/07/Beetroot-eyeliner.jpg)
Homemade eyeliner (Image Source: zohna.com)
ஒரு பெண்ணுக்கு அழகு சேர்ப்பதில் கண்மை இன்றியமையாதது. எவ்வளவு மேக்கப் போட்டும், கண்களில் மை போடவில்லை என்றால், அந்த மேக்கப் முழுமையடையாது. அதேபோல மேக்கப் விரும்பாத பெண்கள் கூட, காஜல் மட்டும் அணிவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவதும் உண்மைதான். கண்களுக்கு காஜல் அணிவது, கண்களை எடுப்பாக காட்டுவதுடன், உங்கள் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.
ஆனால் பெரும்பாலும் சந்தையில் கிடைக்கும் ஐலைனர் ரசாயனம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது கண்களில் போடும் போது, சில நேரங்களில் கண் எரிச்சல், கண்களிலிருந்து நீர் வடியலாம். இயற்கையான ஐ லைனர் உங்களுக்கு வேண்டுமா?
எந்த ரசாயனங்களும் இல்லாமல் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை பயன்படுத்தி, நீங்களே எளிதாக ஐலைனர் தயாரிக்கலாம். இந்த ஹோம்மேட் ஐலைனர் மூலம் உங்களுக்கான புதிய மற்றும் தனித்துவமான ஸ்டைலை உருவாக்குங்கள்.
பீட்ரூட் ஐலைனர்
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Beetroot.jpg)
என்ன பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? உங்கள் மேக்கப்புடன் வெவ்வேறு வண்ணங்களைப் பரிசோதிக்க நீங்கள் விரும்பினால், இந்த ஐலைனர் உங்களுக்கானது.
அரை பீட்ரூட்டை அரைத்து, அதன் சாற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறு, இரண்டு தேக்கரண்டி நேச்சுரல் அலோவேரா ஜெல் சேர்க்கவும். இரண்டையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட் செய்யவும். பிறகு ஒரு காஸ்மெட்டிக் பிரஷ் மூலம் பேஸ்டில் சிறிது நனைத்த பிறகு, உங்கள் கண் ஓரங்களில் அழகான இளஞ்சிவப்பு இறக்கை போல வரையுங்கள்.
வீட்டில் நீங்களே செய்யக்கூடிய இந்த ஐலைனர் உங்கள் தோற்றத்தை மிகவும் கவர்ச்சியாக மாற்றும். எனவே கண்டிப்பா டிரை பண்ணுங்க!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.