scorecardresearch

வாழைப்பழம், கொஞ்சம் தேன்; முகப்பரு, பிக்மென்டேஷன் பிரச்னைக்கு இயற்கை தீர்வு

அழகான சருமத்திற்கு இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை இப்போது முயற்சி செய்யுங்கள்.

lifestyle
Banana Face pack

சில பழங்களில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சில சமயங்களில் ஃபுரூட் ஃபேஷியல் செய்து கொள்வதற்காகவே நாம் பெரும் தொகையை செலுத்துகிறோம். ஆனால் வீட்டிலேயே பளபளப்பான சருமத்தைப் பெற முடியும் எனில் அதை ஏன் செய்ய வேண்டும்?

அழகான சருமத்திற்கு இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை இப்போது முயற்சி செய்யுங்கள்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது. மிருதுவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்.

எப்படி செய்வது?

வாழைப்பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நீங்கள் முகப்பரு மற்றும் பிக்மென்டேஷன் போன்ற தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் சிறிது தேன் சேர்க்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Beauty tips diy banana face pack banana skin benefits