நமது சருமம் பாதிக்கப்படாமல், ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருப்பதை உறுதி செய்ய, வீட்டிலேயே நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய கூடிய சில எளிதான அழகுக் குறிப்புகள் உள்ளன. உங்கள் சருமத்தில் அந்த பிரகாசத்தைப் பெற ஒரு சூப்பர் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளது.
Advertisment
இந்த மாஸ்க் உங்கள் முகத்துக்கு க்ளென்சிங், மற்றும் பிரைட்னிங் தரும். உங்களிடம் முல்தானி மட்டி இல்லையென்றால், கடலை மாவு அல்லது கொண்டைக்கடலை மாவு பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் – முல்தானி மட்டி
1 தேக்கரண்டி – மஞ்சள்தூள்
1 டீஸ்பூன் – தயிர்
1 தேக்கரண்டி – தேன்
எப்படி அப்ளை செய்வது?
ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் கலக்கவும். உலர்ந்த ரோஜா இதழ்களையும் சேர்க்கலாம். முகத்தை நன்கு சுத்தமாக கழுவிய இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள். அதை 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு ஸ்க்ரப் செய்து கழுவவும்.
இந்த பேக்கை உங்கள் முகம், கழுத்து மற்றும் கைகளில் வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தவும்.
நன்மைகள்
மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது மந்தமான தோற்றமுடைய சருமத்தையும் புதுப்பிக்கிறது.
முல்தானி மட்டி தோலை சுத்தப்படுத்த உதவுகிறது. முல்தானி மட்டி உங்கள் சருமத்திற்கு இயற்கையான எண்ணெய்களைச் சேர்த்து, ஊட்டமளித்து, இயற்கையாகவே பளபளக்கும்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை உருக்குகிறது. இது சருமத்தின் நுண்ணுயிரியான தோலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை சமப்படுத்தவும் உதவுகிறது.
தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள இயற்கையான பாக்டீரியாக்களுக்கு உணவளித்து, உங்கள் சருமத்தின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“