scorecardresearch

2 டீஸ்பூன் தக்காளி சாறு, பழுத்த வாழைப்பழம்.. வீட்டுல ஃபுரூட் பேஷியல் இப்படி பண்ணுங்க

தக்காளி சருமத்தை நிறமாக்கவும், இறுக்கமாகவும், பருக்களை குணப்படுத்தவும் உதவுகிறது. வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது.

2 டீஸ்பூன் தக்காளி சாறு, பழுத்த வாழைப்பழம்.. வீட்டுல ஃபுரூட் பேஷியல் இப்படி பண்ணுங்க
Fruit facial pack for glowing skin

சில பழங்களில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சில சமயங்களில் ஃபுரூட் ஃபேஷியல் செய்து கொள்வதற்காகவே நாம் பெரும் தொகையை செலுத்துகிறோம்.

ஆனால் வீட்டிலேயே பளபளப்பான சருமத்தைப் பெற முடியும் எனில் அதை ஏன் செய்ய வேண்டும்? அழகான சருமத்திற்கு வீட்டில் நீங்களே செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகளை இப்போது முயற்சிக்கவும்.

தக்காளி ஃபேஸ் பேக்

தக்காளி சருமத்தை நிறமாக்கவும், இறுக்கமாகவும், பருக்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

எப்படி செய்வது?

ஒரு கிண்ணத்தில் பழுத்த தக்காளியில் இருந்து 2 டீஸ்பூன் சாறு பிழியவும். அதனுடன் 3 டீஸ்பூன் மோர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை முகத்தில் மென்மையாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு கழுவவும்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது. மிருதுவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்.

எப்படி?

வாழைப்பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நீங்கள் முகப்பரு மற்றும் பிக்மென்டேஷன் போன்ற தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் சிறிது தேன் சேர்க்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

அழகான குளோயிங் சருமத்துக்கு உடனே இந்த ஃபேஸ் பேக் டிரை பண்ணுங்க!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Beauty tips diy fruit facial pack for glowing skin tomato and banana face pack

Best of Express