Advertisment

கொலாஜன் உற்பத்திக்கு தக்காளியின் வைட்டமின் சி: உங்க முகம் ஜொலிக்க இதை பண்ணுங்க!

தேன் மற்றும் தக்காளியின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தின் இயற்கையான pH அளவை பராமரிக்கிறது.

author-image
abhisudha
New Update
lifestyle

Tomato face packs

வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே 1 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய தக்காளி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

Advertisment

தக்காளி உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது, அவற்றின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் அழுக்குகளை அகற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கும். மேலும் அவை டேனை நீக்கி, வெயிலின் தாக்கத்தை ஆற்றும்.

கோடை காலத்திற்கான தக்காளி ஃபேஸ் பேக்ஸ் இங்கே உள்ளன.

தக்காளி, தேன் ஃபேஸ் பேக்

publive-image

தக்காளி மற்றும் தேன் சுருக்கங்கள் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தக்காளியில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்கிறது.

தேன் மற்றும் தக்காளியின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தின் இயற்கையான pH அளவை பராமரிக்கிறது.

எப்படி செய்வது?

ஒரு மசித்த தக்காளியை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலக்கவும். அதை உங்கள் முகம் முழுவதும் மசாஜ் செய்து, உலர விடவும், சிறிது நேரம் கழித்து கழுவவும்.

தக்காளி, கற்றாழை ஃபேஸ் பேக்

publive-image

கோடைக்காலம் என்பது கடுமையான வெயில், ஈரப்பதம் மற்றும் தாங்க முடியாத வெப்பத்தின் தாக்கத்தை நமது சருமம் தாங்கும் காலம். இதனால்  முகம் மந்தமாகி, கரும்புள்ளிகளை உருவாக்கும்.

இந்த தக்காளி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்.

எப்படி செய்வது?

பழுத்த தக்காளியை மசித்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து கொள்ளவும். இதை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து சாதரண தண்ணீரில் கழுவவும்.

அழகான, பளப்பான முகத்துக்கு உங்கள் வீட்டிலிருக்கும் தக்காளியில் இந்த குறிப்புகளை டிரை பண்ணி பாருங்க..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment