scorecardresearch

உலர்ந்த சருமத்திற்கு தேன், கொஞ்சம் தயிர்.. எப்படினு பாருங்க

இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டிஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும்.

facepack
Honey Face pack

தேன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது, இது சருமத்திற்கு ஊட்டமளித்து, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ரசாயனம் இல்லாத மேக்-ஓவருக்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டிஹைட்ரேட்டிங்  சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும்.

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி தயிர்

1 தேக்கரண்டி தேன்

எப்படி உபயோகிப்பது

ஒரு கிண்ணத்தில் தேன், தயிர் இரண்டையும் கலந்து சுத்தமான முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பலன்கள்

தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் மிகுந்த ஈரப்பதத்தை வழங்குகிறது

தயிர் சருமத்தில் நன்றாக இருப்பது மட்டுமின்றி, அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோபயாடிக்குகள், வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தணிக்கும். தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் மிகுந்த ஈரப்பதத்தை வழங்குகிறது.

எந்தவொரு ஃபேஸ் பேக்கிற்கும், நீண்ட கால முடிவுகளைக் காட்ட குறைந்தது மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துவது அவசியம்.

நீங்கள் புதிதாக ஒரு அழகு பராமரிப்பு வழக்கத்தை தொடங்கினால், ஆரம்பத்தில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது. உங்கள் சருமம் அதற்கு செட் ஆனபின், நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செல்லலாம். இருப்பினும், உங்கள் தோல் மருத்துவர் குறிப்பிட்ட எதையும் பரிந்துரைக்காத வரையில்’ எதுவும் இரண்டு முறைக்கு மேல் செய்யக்கூடாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Beauty tips face pack honey curd dry skin