கடுமையான கோடை வெயில், தூசி மற்றும் மாசுபாடுகளுடன் சேர்ந்து, சருமத்தை மந்தமானதாகவும், எண்ணெய் பசையாகவும் மாற்றும்.
Advertisment
சரும பராமரிப்பு என்று வரும்போது பாடி லோஷன் அவசியம். ஆனால் ஒரு நல்ல லோஷன் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும். அது மட்டுமல்லாமல், அழகு தயாரிப்புகளில் பெரும்பாலானவை இரசாயனங்கள் நிறைந்தவை, அவை பெரும்பாலும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு அளிக்க விரும்பினால், வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய பாடி லோஷன் இங்குள்ளது. அதை எப்படி செய்வது என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கின்றன.
கிளிசரின் – 5 டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 7 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை எலுமிச்சை
எப்படி செய்வது?
முதலில் கிளிசரின் எடுத்து ரோஸ் வாட்டரில் கலக்கவும்.
அதில் பாதியாக நறுக்கிய எலுமிச்சையை பிழியவும்.
நன்கு கிளறவும், மூன்று பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
இப்போது லோஷன் தயாராக உள்ளது. நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், ஆனால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்விளைவுகளை தடுக்க, முதலில் பேட்ச் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த லோஷனை நான்கு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
என்ன நன்மைகள்?
இந்த லோஷன், சரும வறட்சி, வெடிப்பு, ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போன்ற பல சரும பிரச்சனைகளை சரி செய்யும்.
கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் பாடி லோஷன் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது சருமத்தின் தரம் மற்றும் அமைப்பை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. இதில் உள்ள அஸ்ட்ரிஜென்ட்கள்’ முகப் புள்ளிகளைக் குறைக்க உதவும்.
இந்த பாடி லோஷனை தினமும் ஒரு முறையாவது, குளித்த பிறகு உடனேயே பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“