தோல் பராமரிப்பு என்று வரும்போது, ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது, அதற்கு பதிலாக, இயற்கையானதை தேர்வு செய்யுங்கள். நமது சருமம் பாதிக்கப்படாமல், ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருப்பதை உறுதிசெய்ய, வீட்டிலேயே நீங்களே சொந்தமாக செய்யக் கூடிய சில எளிதான அழகுக் குறிப்புகள் உள்ளன.
Advertisment
உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெறவும், இயற்கையாக பளபளப்பாகவும் டீடாக்ஸ் ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளது.
தேன் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றாமல் பிரகாசமாக்குகிறது.
தேவையான பொருட்கள்
½ தேக்கரண்டி – மஞ்சள்தூள்
1 டீஸ்பூன் – வேப்பம்பூ தூள்
1 தேக்கரண்டி – முருங்கை தூள்
1 தேக்கரண்டி – அதிமதுரம்
1 தேக்கரண்டி – மஞ்சட்டி (Majishtha)
3 தேக்கரண்டி – முல்தானி மிட்டி
1 தேக்கரண்டி – தேன்
2-3 தேக்கரண்டி – பால் மற்றும் தண்ணீர்
எப்படி அப்ளை செய்வது?
அனைத்து பொருட்களையும் கலந்து உங்கள் முகத்தில் சமமாக தடவவும். அதை முழுமையாக உலர விடாதீர்கள். ஏனெனில் இது உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகிறது. எப்போதும், ஃபேஸ்-மாஸ்க் சிறிது, வெடிக்க ஆரம்பித்தவுடன் அதை கழுவ வேண்டும்.
குறிப்பு: இந்த ஃபேஸ் மாஸ்க், 100 சதவீதம் இயற்கையாக இருந்தாலும், எந்தவொரு மூலப்பொருளும் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தவில்லை இல்லை என்பதை உறுதிப்படுத்த முதலில் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“