ஒளிரும் முகப்பரு இல்லாத சருமம் உங்களுக்கு வேண்டுமா? ஐஸ் க்யூப்ஸ் உள்ளே இருந்து மட்டுமல்ல, வெளியிலிருந்தும் நம்மை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும். ஐஸ் க்யூப்ஸ் சருமத்தை பளபளப்பாக்குகிறது. மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது. முன்கூட்டிய வயதாவதைத் தடுக்கின்றன.
இனி, விலையுயர்ந்த தோல் பராமரிப்புப் பொருட்கள் அனைத்தையும், இந்த செலவு குறைந்த நீங்களே வீட்டில் செய்யக்கூடிய ஐஸ் கியூப் ரெசிபிகளால் மாற்றலாம்.
தேன் மற்றும் ஸ்ட்ராபெரி கொண்டு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய ஐஸ் க்யூப் ஃபேஸ் பேக் இங்கே..
தேவையான பொருட்கள்
* ஸ்ட்ராபெர்ரி- 3
* தேன்-1 டீஸ்பூன்
* தண்ணீர்
செய்முறை
* மூன்று ஸ்ட்ராபெர்ரிகளை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். அனைத்தும் ஒரே வடிவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* இப்போது ஐஸ் ட்ரேயில் தண்ணீரை நிரப்பி அதில் துண்டுகளை நேர்த்தியாக வைக்கவும்.
* ஒவ்வொரு ட்ரேயிலும் மூன்று துளிகள் தேன் சேர்க்கவும்.
* சில மணி நேரம் ஃபிரீசரில் உறைய வைக்கவும்.
* முடிந்ததும், நீங்கள் ஒரு ஐஸ் கியூப்ஸ் எடுத்து, உங்கள் முகத்தை சுத்தம் செய்து, பின்னர் கழுத்து பகுதியுடன் சேர்த்து மெதுவாக மசாஜ் செய்யலாம்.
இதேபோல் ஒவ்வொரு நாளும் செய்யவும்.
பலன்கள்
ஸ்ட்ராபெர்ரி இயற்கையில் அமிலத்தன்மை கொண்டவை, அவை சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த சருமத்தை அகற்ற உதவுகின்றன, அதே நேரத்தில் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து புத்துயிர் அளிக்கும்.
மேலும், ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை சருமத்தை வயதான ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும். தேன், உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கும் சிறந்தது. ஏனெனில் இது வறண்ட மற்றும் எண்ணெய், முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு வேலை செய்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“