ரோஸ் வாட்டர் உங்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல், சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கிறது. ரோஸ் வாட்டரை உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம், கரும்புள்ளி, வெள்ளைப்புள்ளிகள் மற்றும் பருக்களை திறம்பட குறைக்கலாம். இது சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரிக்க எளிதான செய்முறை இங்கே உள்ளது. அதற்கு உங்களுக்கு ரோஜா இதழ்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் மட்டுமே தேவை.
ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?
ரோஜா இதழ்கள் புதிதாக இருக்க வேண்டும். அவற்றை வளர்க்கும்போது பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயனங்களைப் பயன்படுத்தக்கூடாது, அதனால்தான் நீங்களே வளர்த்த ரோஜாக்களை பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

சூரிய உதயத்திற்கு பிறகு 2-3 மணி நேரம் கழித்து, பூக்களைப் பறிக்கவும். இதழ்களை மட்டும் பயன்படுத்தவும். தண்டு மற்றும் இலைகளை அல்ல, பூச்சி மற்றும் அழுக்கு துகள்களை அகற்ற நன்கு கழுவவும்.
ரோஜாக்களின் இதழ்களை எடுத்து தடிமனான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தில் போடவும். இப்போது ரோஜா இதழ்கள் மூழ்கும் அளவுக்கு ஏற்கெனவே காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் ஊற்றவும். அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது.
இப்போது பாத்திரத்தை மூடிவிட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும். தண்ணீர் சூடாகக் கொதிக்காமல் இருக்க வேண்டும்.
ரோஜா இதழ்களின் நிறத்தை தண்ணீர் எடுக்கும் வரை, தண்ணீரை வேக வைக்கவும். இப்போது தண்ணீர் லேசான இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறி’ ரோஜா எண்ணெய் மேற்பரப்பில் மிதப்பதை நீங்கள் காண்பீர்கள். அதை குளிர விடவும்.
பிறகு ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அதை ஃபிரிட்ஜில் வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்தவும்.
பலன்கள்
முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது சருமத்தை அமைதிப்படுத்த உதவுகிறது, ஏனெனில் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கின்றன. இது வடுக்கள், கறைகள் மற்றும் தீக்காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“