கற்றாழை ஜெல், கொஞ்சம் ரோஜா இதழ்.. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் டோனர்

ரோஸ் வாட்டர், கற்றாழை மட்டும் போதும். இயற்கையான டோனர் நீங்களே வீட்டில் செய்யலாம்.

ரோஸ் வாட்டர், கற்றாழை மட்டும் போதும். இயற்கையான டோனர் நீங்களே வீட்டில் செய்யலாம்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

DIY Toner for skin

உங்கள் தினசரி வேலைகளுக்கு இடையில் ஒவ்வொரு நாளும், அவசியம் கடைபிடிக்க வேண்டிய எளிய காலை தோல் பராமரிப்பு பழக்கம் இங்கே உள்ளது. அதற்கு பெரிதாக செலவு செய்ய வேண்டிய தேவையில்லை. ரோஸ் வாட்டர், கற்றாழை மட்டும் போதும். இயற்கையான ஹோம்மேட் டோனர் நீங்களே வீட்டில் செய்யலாம்.  இது உங்கள் முகத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

Advertisment

ரோஸ் வாட்டர், கற்றாழை கொண்டு செய்யப்படும் இந்த ஹோம்மேட் டோனர், உணர்திறன் வாய்ந்த சருமத்தில், முகப்பரு வருவதை தடுக்கவும், வீக்கம், சிவத்தல், அரிப்பு மற்றும் சொறி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

எப்படி செய்வது?

publive-image
அலோ வேரா ஜெல் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. இது சருமத்திற்கு மிகவும் இயற்கையான தீர்வுகளில் ஒன்றாகும்.
Advertisment
Advertisements

உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால், அதை வெட்டி எடுத்து நன்கு கழுவி, அதிலிருந்து புதிய ஜெல்லை எடுக்கவும். ​​நீங்கள் சந்தையில் இருந்தும் இயற்கையான கற்றாழை ஜெல் வாங்கலாம்.

அடுத்து, சில புதிய ரோஜா இதழ்களை எடுத்து அவற்றை நன்கு கழுவவும். ஜெல் மற்றும் இதழ்களை ஒரு பிளெண்டரில் போட்டு அரைக்கவும். சிறிது நுரை மற்றும் சிறிது திரவத்துடன் பேஸ்ட் கிடைக்கும். உங்கள் டோனர் இப்போது ரெடி. இதை ஒரு சுத்தமான பாட்டிலில் அதை சேமிக்கவும். ஃபிரிட்ஜில் வைத்தால்,இது குறைந்தது 5-7 நாட்கள் வரை நீடிக்கும்.

டோனரின் ஆயுளை அதிகரிக்க விரும்பினால் அதில் 2-3 சொட்டுகள் சிறிது வைட்டமின் ஈ எண்ணெய் சேர்க்கவும். உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெயையும் அதில் சேர்க்கலாம்.

எப்படி அப்ளை செய்வது?

முதலில் குளிர்ந்த நீரைக் கொண்டு உங்கள் முகத்தை சுத்தம் செய்யவும்.  பின்னர் டோனரை காட்டன் பால்ஸ் கொண்டு முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் மெதுவாக தடவவும். அப்ளை செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள்.

பலன்கள்

ஒவ்வொரு நாளும் இதைப் பயன்படுத்தும்போது சருமம் இறுக்கமடையும். வெயிலில் ஏற்படும் டேனிங் அல்லது வேறு எந்த வகையான ஆபத்தான தோல் காயத்தையும் விரைவாக குணப்படுத்தும். முகப்பருக்கள் குறையும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் தோன்றும். பருக்கள், சொறி போன்ற தோல் பிரச்சனைகள் குறையும்.

உடனே இந்த ஹோம்மேட் டோனரை வீட்டில் செய்து அழகான சருமத்தை பெறுங்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: