தோல் பராமரிப்பு என்று வரும்போது, ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது, அதற்கு பதிலாக, இயற்கையானதை தேர்வு செய்யுங்கள்
Advertisment
பளபளப்பு இல்லாத மந்தமான சருமத்துடன் நாம் அனைவரும் போராடுகிறோம்.
எவ்வாறாயினும், நமது சருமம் பாதிக்கப்படாமல், ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருப்பதை உறுதிசெய்ய, வீட்டிலேயே நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய கூடிய சில எளிதான அழகுக் குறிப்புகள் உள்ளன. உங்கள் சருமத்தில் அந்த பிரகாசத்தைப் பெற ஒரு சூப்பர் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளது.
தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
Advertisment
Advertisements
இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டிஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். தேன்’ சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் நன்கு நீரேற்றப்பட்ட சருமம் தானாகவே பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நிலையான நீரேற்றத்திற்கு, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதை விட சிறந்த வழி எதுவுமில்லை. வறண்ட சருமம் எளிதில் வீக்கமடையும், எனவே, சருமத்தில் ஈரப்பதம் மற்றும் மென்மையான பொருட்களைப் பயன்படுத்துவது முக்கியம். ஒரு பேட்ச் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி தயிர்
1 தேக்கரண்டி தேன்
எப்படி உபயோகிப்பது?
ஒரு கிண்ணத்தில் தயிரையும், தேனையும் கலந்து சுத்தமான முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பலன்கள்
தயிர் சருமத்தில் நன்றாக இருப்பது மட்டுமின்றி, அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோபயாடிக்குகள் வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தணிக்கும். தேன், மேலே குறிப்பிட்டுள்ளபடி, அழற்சி எதிர்ப்பு மற்றும் மிகுந்த ஈரப்பதத்தை வழங்குகிறது.
எந்தவொரு ஃபேஸ் பேக்கிற்கும்’ நீண்ட கால முடிவுகளைக் காட்ட, குறைந்தது மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துவது அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“