கலர்ஸ் தமிழ் டிவியில் இதயத்தை திருடாதே சீரியலில், சகானா’வாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து.
Advertisment
ஹிமா பிந்து, ஒருமுறை தனது அழகு பராமரிப்பு குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் பிந்து பேசுகையில்; முடி பராமரிப்பு பொறுத்தவரையில், அம்மாவுக்கு தெரிஞ்ச ஒருத்தங்க, எல்லா பொருட்களையும் சேர்த்து’ ஒரு எண்ணெய் தயார் பண்ணுவாங்க.. அதுதான் இரவு நேரம் கிடைக்கும் போது’ மிதமா சூடாக்கி, தலையில மசாஜ் செய்துவிட்டு, காலையில் எழுந்ததும் தலைக்கு குளிப்பேன். இதை அடிக்கடி பண்ணாலே முடி கொஞ்சம் மிருதுவாக இருக்கும். முடி கொட்டுறது குறையும்.
நெய் வைக்கலாம். நெய் வைக்கும் போது முடி இன்னும் பிரகாசமா மாறும். பொடுகு தொல்லைக்கு, எலுமிச்சையும், தயிரும் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், அது சரியாகிடும். முடி வளரதுக்காக ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடிப்பேன். கருப்பு நிற முடிக்காக’ கறிவேப்பிலை ஜூஸ் அதிகமா சாப்பிட்டேன்.
டயட் பொறுத்தவரையில், காலையில், 2-3 முட்டை சாப்பிடுவேன். அம்மா ஜூஸ் கொடுத்து அனுப்புவாங்க. இல்லன்னா இட்லி சாப்பிடுவேன். அதிகம் சாப்பிட மாட்டேன், வயிற்றுக்கு எவ்ளோ போகுதோ அவ்ளோதான்.
இரவு, பாதாம், கருப்பு திராட்சை ஊறவைத்து காலை எழுந்ததும் சாப்பிடுவேன். மதியம் புரொடக்ஷன் சாப்பாடு தான். ரொம்ப பசியெடுத்தா வேணா, ஆர்டர் பண்ணுவேன். பிறகு நைட்டு வழக்கம்போல வீட்டு சாப்பாடுதான் என ஹிமா பிந்து தனது லைஃப் ஸ்டைல் குறித்து பேசினார்.
ஹிமா பிந்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வீடியோ இதோ!
அதேபோல ஹிமா, மற்றொரு பேட்டியிலும் தன்னுடைய அழகு பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார். வீடியோவில் பிந்து பேசுகையில்; காலை, நைட்-னு ஷூட்டிங் போறதால டார்கிள் சர்கிள்ஸ் வந்தது. அப்போ டீ பேக்ஸ், வெள்ளரி, கீரிம் எல்லாம் டிரை பண்ணேன். ஆனா, எதுவும் வேலை செய்யல. டார்கிள் சர்கிள்ஸ் போகணுனா நல்ல தூங்கணும். ஆனா, சீரியல்ல இருக்கிறவங்களுக்கு அது ரொம்ப கஷ்டம்.
அதேமாதிரி மேக்கப் நிறைய யூஸ் பண்றதலா, முகப்பரு வரும். அப்போ, சந்தனம், பெட்நோவேட் கிரீம் வைக்கலாம். ஐஸ் கியூப்ஸ் பெஸ்ட். ஆனா, நீங்க என்ன பண்ணாலும் பரு உடனே போகாது. ஒரு 2-3 நாள் ஆகும்.
எனக்கு காம்பினேஷன் ஸ்கின். பொதுவா என்னோட ஸ்கின் கேர்க்கு மாய்ஸ்சரைசர், ஷியா பட்டர், கற்றாழை ஜெல், ஐஸ் கியூப்ஸ் யூஸ் பண்ணுவேன். ஷூட் இல்லாத டைம்ல, முல்தானி மட்டி, அரிசி மாவு, தயிர் இல்லன்னா ரோஸ் வாட்டர்ல கலந்து ஃபேஸ் பேக் போட்டுப்பேன்.
நிறைய பேரு அழகா இருக்கனும்னு பார்லர் போவாங்க. அதுதான் பெரிய பிரச்சனை. அது பிஸினஸ். பார்லர் போனா, இன்ஸ்டண்ட் லுக் உடனே கிடைக்கும். ஆனா அது ஹெல்தி இல்ல. எல்லாமே கெமிக்கல்ஸ் தான். நான் கலரிங் பண்ணிட்டு, ஹேர் ஸ்ட்ரைட், ப்ளோ டிரை அது, இதுன்னு பண்ணி நல்லா இருந்த முடிய ஃபுல்லா டேமேஜ் பண்ணிட்டேன். பொண்ணுங்களுக்கு முடிதான் அழகு. அதை பத்திரமா பாத்துகணும், ஹேர் கலரிங் மட்டும் பண்ணவே பண்ணாதீங்க என நிறைய விஷயங்களை ஹிமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவை கீழே பாருங்க..
&feature=emb_logo
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“