Advertisment

இது நானே ரெடி பண்ண கிரீம்.. சீரியல் நடிகை கவிதா பியூட்டி சீக்ரெட்ஸ்

ஃபிரெஷ் கற்றாழை எடுத்து, ஐஸ் டிரேயில ஊத்தி வச்சுடுவேன். காலையில எழுந்த உடனே, ஓரே ஒரு கியூப்ஸ் எடுத்து முகம் முழுவதும் மசாஜ் பண்ணினா, இரத்த ஓட்டம் நல்ல இருக்கும்- கவிதா சோலைராஜா

author-image
abhisudha
Oct 03, 2022 12:53 IST
Kavitha solairaja

Kavitha solairaja Beauty secrets

பிரபல தமிழ் சீரியல் நடிகை கவிதா சோலைராஜா, சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் நடித்து, தனது சின்னத்திரை பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் என பல சீரியல்களில் நடித்தார்.

Advertisment

கவிதா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.

முதலில் மேக்கப்  குறித்து கவிதா பேசுகையில்; 90ஸ்ல பேன்கேக் இருக்கும். பிரஷ் இருக்கும். ரெண்டும் எடுத்து தண்ணில மிக்ஸ் பண்ணி, அதை முகத்துல அப்ளை பண்ணிட்டு, விசிறி வச்சு நல்ல காய வைக்கணும்.. காலையில ஒரு தடவை போட்டா நைட் ஷூட் முடியுற வரை, அந்த மேக்கப் அப்படியே இருக்கும்.. ஆனா இப்போ லிக்வைட் பவுண்டேஷன் வந்துருச்சி. அதனால கொஞ்சம் ஓவரா வேர்த்துடுச்சுனா லைட்டா பேட்ச் வர ஆரம்பிக்கும். ஆனா, காலத்துக்கு ஏத்த மாதிரி நம்மள மாத்திக்கணுங்கிறதால, நான் இந்த மேக்கப்க்கு மாறிட்டேன்.

என்னோட பிரிட்ஜில எப்போவும் ஐஸ் கியூப்ஸ் இருக்கும். அதை தவிர, நான் ஃபிரெஷ் கற்றாழை எடுத்து, ஐஸ் டிரேயில ஊத்தி வச்சுடுவேன். காலையில எழுந்த உடனே, ஓரே ஒரு கியூப்ஸ் எடுத்து முகம் முழுவதும் மசாஜ் பண்ணினா, இரத்த ஓட்டம் நல்ல இருக்கும்.

அதுக்கப்புறம் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு, டோனர், மாய்ஸ்சரைசர் சன்ஸ்கிரீன் எல்லாம் போடுவேன்.

அதேபோல, நைட் ஷூட் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து நேரம் இருந்தா, மேக்கப் ரிமூவ் பண்ண அப்புறம், உருளைக்கிழங்கு, தக்காளி ஏதாவது ஐஸ் கியூப்ஸ் பண்ணி வச்சுருப்பேன். அதை எடுத்து முகத்துக்கு மசாஜ் பண்ணுனா ஸ்கின் நல்ல சாஃப்டா இருக்கும். அதுக்கு பிறகு எப்போவும் போல, டோனர், மாய்ஸ்சரைசர் எல்லாம் போடுவேன்.

நைட்டுக்கு நானே ஒரு கிரீம் ரெடி பண்ணி வச்சுருக்கேன். பாதாம் எண்ணெய், கிளீசரின், ரோஸ் வாட்டர், கற்றாழை ஜெல், இது நான்குமே சம அளவு எடுத்து, நல்லா மிக்ஸ் பண்ணி வச்சுடுவேன். அது ஒரு வாரத்துக்கு வரும். நைட் மாய்ஸ்சரைசர் எல்லாம் போட்டதுக்கு அப்புறம் அதுக்கு மேல இந்த கிரீம் அப்ளை பண்ணிட்டு தூங்கிடுவேன்.

நான் இதுவரைக்கும் எந்த ஃபேஸ் மாஸ்கும் கடையில வாங்குனதில்ல.. நாம என்ன சாப்பிடுறமோ அதை சருமத்துக்கும் அப்ளை பண்ணலாம். அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, அதுல தயிர் இல்லன்னா பால், மஞ்சள் இது எல்லாமே நாம சாப்பிடற அயிட்டம் தான். அது எல்லாமே நான் முகத்துக்கும் போடுவேன்.

அரிசி மாவு, தயிர், தேன் மிக்ஸ் பண்ணி ஃபேஸ் மாஸ்க் போடுவேன். அரிசி மாவு கொரகொரப்பா இருக்கிறதால நல்ல ஸ்கிரப் பண்ணும்.. தயிர், தேன் மாய்ஸ்சரைசர் கொடுக்கும். 

இதேபோல மேலும் பல அழகுக் குறிப்புகளை கவிதா, ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார். இதோ அந்த வீடியோ!

&t=554s

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment