வாணி ராணி, கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நிவேதிதா. இப்போது சன் டிவியின் திருமகள் சீரியலில் நடிக்கிறார்.
Advertisment
நிவேதிதா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
முதலில் சரும பராமரிப்பு குறித்து நிவேதிதா பேசுகையில்சரும பராமரிப்பு வரும்போது, வெளியில நம்ம அப்ளை பண்ற மேக்கப் மட்டுமல்லாம, நம்ம என்ன சாப்பிடுறோம் ரொம்ப முக்கியம்.
சருமத்துக்கு முக்கியமா ஹைட்ரேஷன் தேவை. நான் காலையில எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீருடன் என் நாளை தொடங்குவேன். அதுக்கு பிறகுதான் முகம் கழுவுவேன். மைல்ட் கிளென்சர் ஃபேஸ் வாஷ் தான் யூஸ் பண்ணுவேன். அப்புறம் மாய்ஸ்சரைசர், சன்ஸ்கீரின் அப்ளை பண்ணுவேன். நைட் தூங்கும் போது, கூடுதலா சீரம், நைட் கிரீம், சேத்துப்பேன்.
அண்டர் ஐ கிரீம், காலை, இரவு ரெண்டு நேரமும் யூஸ் பண்ணுவேன்.
பொதுவா நான் டெர்மடாலஜிஸ்ட் பரிந்துரைக்கிற ஸ்கின் கேர் பிரொடக்ட்ஸ் தான் யூஸ் பண்ணுவேன். கற்றாழை உண்மையா ஒரு அதிசயமா பிரொடக்ட். எனக்கு அது நல்ல வேலை செய்ஞ்சிருக்கு. இது டேனிங், மாய்ஸ்சரைசிங் இரண்டுக்குமே ரொம்ப நல்லது.
உதட்டுக்கும், ஹைப்பர் பிக்மென்ட்டேஷனுக்கும் பாலாடை நல்ல வேலை செய்யும்.
எனக்கு பார்லர் போறதுக்குலாம் பொறுமை இல்லை. 50 ரூபாய்க்கு நம்மளே வீட்டுல பண்றது, பார்லருக்கு போனா 5000 ரூபாய் செலவாகும். அதனால நானே வீட்டுல வேக்ஸ் பண்ணிப்பேன். நானே ஐ பிரோஸ் டிரிம் பண்ணிப்பேன்.
முகப்பரு ஒரு லைஃப் ஸ்டைல் பிரச்சனை தான். நம்ம என்ன சாப்பிடுறோம். ஹார்மோன்ஸ், மேக்கப் எல்லாமே கலந்தது தான். முகப்பரு வராம நாம தடுக்க முடியாது. ஆனா தழும்பு வராம இருக்க என்னென்ன பண்ண முடியுமோ, அதெல்லாம் பண்ணலாம். எடுத்துக்காட்டா ஹைட்ரேட்டிடா இருக்கிறது.
நிறையபேரு சோம்பேறியா இருக்குனு அப்படியே மேக்கப் ஓட தூங்குவாங்க. அப்படி பண்ணா, முகப்பரு வரும். அதனாலா எவ்ளோ டயர்டா இருந்தாலும், ஒழுங்கா ஃபேஸ் வாஷ் பண்ணனும்.
தேங்காய் எண்ணெய் இல்ல மேக்கப் ரீமுவர்லாம் யூஸ் பண்ணி, மேக்கப் எடுத்ததுக்கு அப்புறமா ஃபேஸ் வாஷ் பண்ணனும். அப்புறம் நைட் ஸ்கின் கேர் எல்லாம் முடிச்சதுக்கு அப்புறமா தூங்குங்க. உங்க சரும துளைகள் சுத்தமா இருக்கிற மாதிரி பாத்துக்கங்க. எடுத்த உடனே நேரா போயி பேஸ் வாஷ் பண்றதால எந்த பிரயோஜனும் இல்ல.
இப்போ பிம்பிள் பேட்ச் இருக்கு. அது நீங்க பரு மேல வச்சாலே போதும். அதுல வேம்பு, மஞ்சள் இருக்கு. அது ஸ்கின் கலர்ல இருக்கும். அதனால நீங்க வச்சிருக்கிறது வெளியே தெரியாது. அது வச்சுட்டே நீங்க மேக்கப் கூட போடலாம். சன்ஸ்கீரின் போடாம வெளியே போகக் கூடாது.
இப்படி நிவேதிதா தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து, ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோ இதோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“