Advertisment

கொலாஜன் அதிகரிக்க, வலுவான முடிக்கு அரிசி தண்ணீர் பியூட்டி டிப்ஸ்

கொலாஜனை அதிகரிக்கவும், புத்துணர்ச்சியூட்டும் சருமத்துக்கும்’ அரிசி நீர் க்யூப்ஸைப் பயன்படுத்தலாம்.

author-image
abhisudha
Sep 17, 2022 13:14 IST
New Update
Beauty tips in tamil

Rice water for hair growth, Rice water for skin

அரிசி தண்ணீர் சருமத்துக்கு செய்யும் அற்புதமான நன்மைகளை பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அரிசி தண்ணீர் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது,

Advertisment

ஜப்பானில் ஹெயன் காலத்தில் (794 முதல் 1185 வரை) பெண்கள் தரையை தட்டும் அளவுக்கு நீளமான முடியைக் கொண்டிருந்தனர், அவர்கள் அரிசி நீரில் குளித்து ஆரோக்கியமாக இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அரிசி நீரைப் பயன்படுத்துவது முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், முடி முன்கூட்டியே வயதாவதையும் தாமதப்படுத்துகிறது.

ஏன் புளித்த அரிசி தண்ணீர்?

அரிசியில் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, ஆனால் அதை தண்ணீரில் சமைப்பதால், தண்ணீரை பிரித்தெடுத்தவுடன் ஊட்டச்சத்துக்கள் நீக்கப்படுகின்றன. அரிசி நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆய்வின்படி, புளிக்கவைக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி மற்றும் தோல் செல் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது, அதனால்தான் அவை பொதுவான அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

அரிசி தண்ணீரை எப்படி செய்வது?

அரிசியை நன்றாக கழுவவும். ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய அரிசியை போடவும். அதை 12 மணி நேரம், அறை வெப்ப நிலையில், ஊறவைக்க வேண்டும். பின்னர், தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் சேமிக்கவும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தவும்.  இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து முடி மற்றும் சருமத்துக்கு ஸ்பிரேயாகவும் பயன்படுத்தலாம்.

நன்மைகள் என்ன?

publive-image

புளித்த அரிசி நீரில் உள்ள குறைந்த pH மதிப்பு மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குவதுடன், பளபளப்பையும் சேர்க்கிறது. உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தின் கடைசி படியாக இந்த மூலப்பொருளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இது உங்கள் கூந்தலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் ஆக்குகிறது, மேலும் நீண்ட முடியில் இருந்து சிக்கை எளிதில் அகற்ற உதவுகிறது.

இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற அலன்டோயின் உள்ளது, அத்துடன் புரோட்டீன்கள் முடி தண்டை வலுப்படுத்தவும், விரிசல்களை சரிசெய்யவும் உதவும்.

அரிசி நீர் ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது. ஷாம்பு செய்த பிறகு, அரிசி தண்ணீரை உங்கள் தலைமுடியில் தடவவும். 15-20 நிமிடங்களுக்கு இயற்கையான சூழலில் உலர வைக்கவும், பின்னர் சாதாரண நீர் கொண்டு கழுவவும். புளித்த அரிசி நீரில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது முடிக்கு மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

சருமத்துக்கு எப்படி பயன்படுத்துவது?

publive-image

கொலாஜனை அதிகரிக்கவும், புத்துணர்ச்சியூட்டும் சருமத்துக்கும்’ அரிசி நீர் க்யூப்ஸைப் பயன்படுத்தலாம். ஐஸ் ட்ரேயில், அரிசி தண்ணீரை ஊற்றி, அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து உறைய வைக்கவும்.

இந்த ஐஸ் கட்டிகளை முகம், கழுத்து மற்றும் முகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்’ டோனராகப் பயன்படுத்தவும். குளிர்காலத்தில் சருமத்தை பளபளப்பாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க அரிசி தண்ணீர் சிறந்தது.

முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுகளை (dark patches) போக்க ’ அரிசித் தண்ணீரைப் பயன்படுத்தலாம் அல்லது அரிசிப் பொடியை பச்சைப் பாலுடன் கலந்து கெட்டியான பேஸ்ட் செய்து, அதை உங்கள் முகம், கழுத்து பகுதிகளில் தடவி, சில நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மீண்டும் செய்யவும்.

புளித்த அரிசி நீர் புற ஊதா கதிர்கள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment