அரிசி தண்ணீர், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது, இது சருமம் வயதாவதை திறம்பட தடுக்கிறது, புற ஊதா சேதத்தை குறைக்கிறது மற்றும் சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாகவும் செயல்படுகிறது.
Advertisment
சீனா மற்றும் கொரியாவில், பல தோல் பராமரிப்பு முறைகளில் புளித்த அரிசி ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. அரிசி நீர் சருமத்தில் UV பாதிப்பைக் குறைப்பதற்கும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது சருமத்தை மிருதுவாக வைத்து சுருக்கங்களைத் தடுக்கிறது.
எப்படி உபயோகிப்பது
அரிசியை வேகவைத்து வடிகட்டி அந்த தண்ணீரை ஆறவிடவும். பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும்.
இல்லையெனில் அரிசியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரைச் சேகரிக்கலாம்.
2-3 நாட்கள் தண்ணீரை அப்படியே வைக்கவும். பிறகு, புளித்த அரிசி நீரை காலையில் குளித்த பின் மற்றும் படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் தெளிக்கவும்.
கண்ணாடி போன்ற மின்னும் சருமத்துக்கு இந்த பியூட்டி டிப்ஸ்களை கண்டிப்பா டிரை பண்ணுங்க..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“