பளபளப்பு இல்லாத மந்தமான சருமத்துடன் நாம் அனைவரும் போராடுகிறோம். அதற்காக பார்லர் செல்ல தேவையில்லை. உங்கள் வீட்டு சமையலறையில் இயற்கையாகவே சருமத்திற்கு ஆரோக்கியமான பொலிவைத் தரும் பல்வேறு பொருட்கள் உள்ளன.
Advertisment
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது.
இந்த ஃபேஸ் பேக் முகப்பருவை குணப்படுத்தவும், தோல் செல்களை மீண்டும் உருவாக்கவும் மற்றும் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
எப்படி செய்வது?
Advertisment
Advertisements
ஒரு சிறிய கிண்ணத்தில் அரை ஸ்பூன் சுத்தமான மஞ்சள் தூள் சேர்க்கவும். இதில் பாதி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து கொள்ளவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சுத்தமான தேன் சேர்க்கவும்.
அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து, முகம் முழுவதும் மெதுவாக மசாஜ் செய்து பத்து நிமிடம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
இதை வாரம் இருமுறை தொடர்ந்து செய்து வர முகச் சுருக்கங்கள் இல்லாமல் பொலிவான தோற்றத்துடன் இருப்பீர்கள்.
குறிப்பு: மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது சருமத்தை அப்படியே மஞ்சளாக்கி விடும்.
தேன்
தேன் நமது சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர். நீங்கள் தேனை பப்பாளி, வாழைப்பழம் அல்லது ஆரஞ்சு சாறுடன் சேர்த்து ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது தேனுடன் சில எலுமிச்சைத் துளிகள் கலந்து, அதை மாய்ஸ்சரைசராக அப்ளை செய்யலாம்.
இதைத் தொடர்ந்து செய்வதால், உங்கள் சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் மாறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“