Advertisment

ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழங்களை சாப்பிடலாம்?

உடல் எடை குறைக்கவும், அதிகரிக்கவும் வாழைப்பழத்தை சாப்பிடலாம். தினமும் இரண்டு பெரிய வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
banana, potasssium, carbohydrate, metabolism, protein, body weight, வாழைப்பழம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வளர்சிதைமாற்றம், புரதம், உடல்எடை

banana, potasssium, carbohydrate, metabolism, protein, body weight, வாழைப்பழம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வளர்சிதைமாற்றம், புரதம், உடல்எடை

மிக எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று வாழைப்பழம்.   அதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.   இதனை மில்க்‌ஷேக், ஸ்மூத்தி, டெசர்ட், பேன்கேக் போன்ற ரெசிபிகளில் சேர்த்து சாப்பிடலாம். வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருபதால் குடல் இயக்கங்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் குணமாகும்.   அத்தோடு இதை உடற்பயிற்சிக்கு பின் அல்லது முன் சாப்பிட்டால் நல்லது.

Advertisment

நன்மைகள்: 

27 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்ச்சத்து, 14 கிராம் சர்க்கரை மற்றும் 105 கலோரிகள் வாழைப்பழத்தில் உள்ளது.   மேலும் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.   வாழைப்பழத்தில் பொட்டாஷியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கும்.

உடல் எடை குறைக்கவும், அதிகரிக்கவும் வாழைப்பழத்தை சாப்பிடலாம். தினமும் இரண்டு பெரிய வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.  

உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் அல்லது பின் ,   ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

மேலும் இவ் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் இருப்பதால் அதிகபடியாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.   அத்தோடு உடல் எடையும் அதிகரிக்கும். இதில் புரதம் அதிகமாக இருப்பதால் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment