Advertisment

கேஸ் அடுப்பு பற்றவைக்கும் போது உருவாகும் பென்சீன்: என்ன ஆபத்து?

பென்சீன் வெளிப்பாட்டை நீக்குவதில் எக்ஸாஸ்ட் ஃபேன்கள் பெரும்பாலும் பயனற்றவையாக இருப்பதைக் கண்டறிந்தோம், என்று ஜாக்சன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Benzene exposure from gas stoves

Benzene exposure from gas stoves

கேஸ் அடுப்பைப் பற்றவைக்கும்போது வரும் (புற்றுநோயை உண்டாக்கும்) பென்சீனின் (benzene) உட்புற அளவுகள், செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிலிருந்து வரும் சராசரி செறிவை விட மோசமாக இருக்கும் என்று புதிய ஸ்டான்போர்ட் தலைமையிலான பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

Advertisment

பென்சீன் வீடு முழுவதும் பரவுகிறது மற்றும் வீட்டு காற்றில் மணிக்கணக்கில் நீடிக்கிறது, என்று சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பென்சீன் தீப்பிழம்புகள், எண்ணெய் வயல்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற பிற உயர் வெப்பநிலை சூழல்களில் உருவாகிறது.

நம் வீடுகளில் உள்ள கேஸ் அடுப்புகளின் தீப்பிழம்புகளிலும் பென்சீன் உருவாகிறது, என்று ஆய்வின் மூத்த எழுத்தாளரும், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் டோயர் ஸ்கூல் ஆஃப் சஸ்டைனபிலிட்டியின் எர்த் சிஸ்டம் சயின்ஸ் பேராசிரியரான ராப் ஜாக்சன் ஆய்வின் மூத்த எழுத்தாளர் கூறினார்.

நல்ல காற்றோட்டம் மாசுபடுத்தும் செறிவுகளைக் குறைக்க உதவுகிறது, ஆனால் பென்சீன் வெளிப்பாட்டை நீக்குவதில் எக்ஸாஸ்ட் ஃபேன்கள் பெரும்பாலும் பயனற்றவையாக இருப்பதைக் கண்டறிந்தோம், என்று ஜாக்சன் கூறினார்.

கேஸ் அடுப்புகளின் தீப்பிழம்புகளில் உருவாகும் பென்சீனின் உட்புற செறிவுகள், செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிலிருந்து வரும் சராசரி செறிவை விட மோசமாக இருக்கும் என்றும், பென்சீன் சமையலறையிலிருந்து வெகு தொலைவில் உள்ள மற்ற அறைகளுக்கு இடம்பெயரலாம் என்றும், மேலும் படுக்கையறைகளில் அளவிடப்படும் செறிவு தேசிய மற்றும் சர்வதேச சுகாதார அளவுகோல்களை விட அதிகமாக இருக்கும்.

பென்சீன் மற்றும் பிற மாசுகளின் செறிவுகளைக் குறைப்பதில் residential range hoods எப்போதும் பயனுள்ளதாக இல்லை என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

கேஸ், புரொப்பேன் பர்னர்கள் மற்றும் ஓவன்ஸ், மின்சார அடுப்புகளை விட 10 முதல் 50 மடங்கு பென்சீனை வெளியிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், அதேசமயம் இண்டக்ஷ்ன் குக்டாப்ஸ் கண்டறியக்கூடிய பென்சீனை வெளியிடவில்லை.

மேலும், மற்ற சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்ட பென்சீன் உமிழ்வு விகிதங்களை விட எரிப்பின் போது வெளிப்படும் பென்சீனின் விகிதங்கள் நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

கேஸ் அடுப்பு அல்லது ஓவன் பயன்பாட்டில் இருக்கும்போது பென்சீன் உமிழ்வை பகுப்பாய்வு செய்வது இதுவே முதல்முறை என்று ஆய்வு கூறியது, முந்தைய ஆய்வுகள், அடுப்புகள் அணைக்கப்படும்போது அடுப்புகளில் இருந்து கசிவுகள் மீது கவனம் செலுத்தியது மற்றும் பென்சீன் செறிவுகளை நேரடியாக அளவிடவில்லை.

சமைக்கப்படும் உணவுகள் பென்சீனை வெளியிடுகிறதா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர், சாலமீன் பொரியல் அல்லது பன்றி இறைச்சியிலிருந்து பென்சீன் உமிழ்வு இல்லை என்பதை கண்டறிந்தனர்.

ஆய்வாளர்கள் அளவிடும் அனைத்து பென்சீன் உமிழ்வுகளும் சமைத்த உணவைக் காட்டிலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளிலிருந்து வந்தவை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment