Best hill stations in south India | தேனிலவு இடங்கள் | தென்னிந்தியாவின் சிறந்த மலைவாசஸ்தலங்கள் | புதிதாகத் திருமணமான தம்பதிகள் தங்களை ஒருவரையொருவர் நெருக்கமாக்கிக் கொள்வதற்காக தேனிலவு செல்வது வழக்கம். பொதுவாக நம் ஊரில், தேனிலவு என்றவுடன் கொடைக்கானல், ஊட்டிக்கு தான் செல்வார்கள். ஆனால் தமிழகத்தை ஓட்டி சிலமணி நேர பயணத்திலே தேனிலவு செல்வதற்கு சில அழகான இடங்கள் உள்ளன. இங்கு தென் தமிழகத்தின் சிறந்த தேனிலவு தலங்களை பார்க்கலாம்
Advertisment
கூர்க்
கர்நாடகாவில் மைசூரு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அழகிய சுற்றுலாத் தலம் கூர்க். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு நிலவும் குளிர்ச்சியான பருவநிலைக் காரணமாக 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என அழைப்படுகிறது.
குடகு மலை ட்ரீ ஹவுஸ்
எங்கு திரும்பினாலும் பனிமூட்டம், பச்சை பசேலென்ற காடுகள், ரம்மியமாய் ஆர்ப்பரிக்கும் அருவிகள், அழகிய காபி, தேயிலை தோட்டங்கள் என கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் கூர்க் தம்பதிகளுக்கு நீங்கா நினைவுகளை தரும். இங்குள்ள தலைக்காவேரி என்னும் இடத்தில் தான் காவிரியாறு உற்பத்தியாகிறது.
மடிக்கேரி, அபே அருவி, இருப்பு அருவி, ராஜா சீட், துபாரே காடு, திபெத்திய தங்கக் கோயில் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள். போட்டிங், ட்ரெக்கிங், அருவிக் குளியல் என எல்லாமே இங்கு அனுபவிக்கலாம். மைசூரில் இருந்து கூர்க் - 125 கி.மீ. தூரத்தில் உள்ளாது. சென்னையில் இருந்து மைசூரு வழியாக கூர்க் செல்லலாம். கோவையில் இருந்து கூர்க் வருபவர்கள் சத்தியமங்கலம், திம்பம் வழியாக மைசூரைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வழி, அருமையான த்ரில்லிங் பயணத்தைத் தரும்.
கேரளா
அமைதியான உப்பங்கழிகள், பசுமையான மலைத்தொடர்கள், கண்கவர் நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடற்கரைகள் என கேரளா இயற்கையின் சிறந்த அருளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்காலத்தில் உங்கள் துணையை உங்களுடன் கேரளாவிற்கு அழைத்துச் செல்லுங்கள்.
ஆலப்புழா ஹவுஸ்போட்
இங்கு ஆலப்புழா ஹவுஸ்போட் தேனிலவுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். ரொமாண்டிக் டின்னர், அழகான போட்டோஷூட் ஆகியவை தம்பதிகள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய சில விஷயங்கள்.
தேக்கடி, வாகமண், இடுக்கி, பீர்மேடு, மலம்புழா, அய்யம்புழா, மலையத்தூர் பார்க்க வேண்டிய இடங்கள். பேகல் பீச், செராய் பீச் மற்றும் பாபநாசம் பீச் போன்றவை கேரளாவில் செல்ல வேண்டிய சில கடற்கரைகள். வயநாட்டில் உள்ள செத்தாலயம் அருவி, இடுக்கியில் உள்ள கீழ்குத்து அருவி, திருச்சூரில் உள்ள வாழச்சல் அருவியும் பார்க்க வேண்டியவை.
மூணாறு
இடுக்கி மாவட்டம் மூணாறில் ஆண்டின் பல மாதங்கள் குளிர், பனி போன்றவற்றுடன் சாரல்மழையும் பெய்வதால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை போர்த்தியது போல இருக்கிறது. மூணாறைச் சுற்றிலும் உள்ள அணைகளில் படகுசவாரி, பசுமையான பள்ளத்தாக்கு, பூங்கா, மலையேற்றம், நீர்வீழ்ச்சி போன்ற பொழுது அம்சங்களும் அதிகம் உள்ளன.
பனிப்போர்வை போர்த்திக் கிடக்கும் மூணாறு மலைகள்
மூணாறில் அதிகமாக நம் கண்களைக் கொள்ளைகொள்வது தேயிலைத் தோட்டங்கள்தான். அதனிடையே வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளைக் காண்பதற்கு அற்புதமாக இருக்கும். இங்கு திடீர் திடீரென கிளைமேட் மாறி விடுவது அதன் அதிசயத் தக்க அம்சம்.
மூணாறில், இறவிக்குளம் தேசிய பூங்கா, மாட்டுப்பட்டி அணை, நியமக்கடா எஸ்டேட், எக்கோ பாயிண்ட் ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். மூணாறு யானைச் சவாரி மிகவும் பிரபலம். சின்னாறு ட்ரெக்கிங் பாயிண்ட், சந்தன மரக்காடு, செங்குளம் போட்டிங், குந்தளா, லக்கோம் நீர்வீழ்ச்சி போன்றவை மூணாறில் பார்த்துப் பரவசம் அடையவேண்டிய முக்கிய இடங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“