scorecardresearch

இதுதான் சம்மர் ஹேர் ஸ்டைல்; ஃபரினா வெண்பா வீடியோ

தினமும் தலைக்கு குளிக்கவே கூடாது. நீங்கள் எவ்வளவு வேலை பார்த்தாலும் வாரத்துக்கு மூன்று முறை தலை கழுவினால் போதும்

Farina-Azad
Farina-Azad

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஃபரினா ஆசாத், ஆங்கரிங், மாடலிங், நடிப்பு என எப்போதும் பிஸியாக இருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஃபரினா, சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா போஸ்ட் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதில் சம்மர் ஹேர் ஸ்டைல் என்று சொல்லி ஒட்டுமொத்த முடியையும் அள்ளி எடுத்து, மொத்தமாக கொண்டை போடுகிறார்.

ஒருமுறை ஃபரினா தனது முடி பராமரிப்பு ரகசியம் குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது பகிர்ந்து கொண்டார்.

அதில், தினமும் தலைக்கு குளிக்கவே கூடாது. நீங்கள் எவ்வளவு வேலை பார்த்தாலும் வாரத்துக்கு மூன்று முறை தலை கழுவினால் போதும். எண்ணெய் வைப்பதால், வறண்ட முடி, மிருதுவாக மாற ஆரம்பிக்கும். அதேபோல, தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது.

பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், வைட்டமின் – ஈ மாத்திரை வாங்கி, இந்த மூன்று ஆயிலையும், வைட்டமின் ஈ மாத்திரையுடன் நன்றாக மிக்ஸ் பண்ணி யூஸ் பண்ணலாம்..

பீர் கொண்டு தலைமுடியை கழுவினால் முடி மிருதுவாக, துள்ளலாக இருக்கும். முதலில் பீரை கூந்தலில் தேய்த்து, பிறகு ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும்.

சின்ன வெங்காயம் ஜூஸ் அல்லது பேஸ்டை, தலையின் முடி குறைவாக இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்யலாம். முக்கியமான விஷயம். 10 நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. இப்படி பல குறிப்புகளை ஃபரினா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Bharathi kannama farina azad instagram hair care