Advertisment

ஓ வால்பாறை கூழாங்கல் ஆறு இதுதானா? ஃபரினா கீயூட் வீடியோ

ஃபரினா சமீபத்தில் தன் தோழிகளுடன் சேர்ந்து வால்பாறைக்கு ஜாலியாக டூர் சென்றுள்ளார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
farina azad

farina azad

சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார்.

Advertisment

டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார். ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான்.

ஃபரினா தனது நீண்டகால காதலரான ரஹ்மான் உபைத்தை கடந்த நவம்பர் 2017 இல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு, சயன் லாரா ரஹ்மான் என்ற அழகான ஆண்குழந்தை உள்ளது.

இப்போது ஃபரினா, தன் கணவருடன், விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில்’ ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் ஏற்கெனவே இதே நிகழ்ச்சியின் சீசன் 1ல் பங்கேற்று ஆரம்பத்திலேயே, எலிமினேட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பிஸியாக இருக்கும் ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தன் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் ஃபரினா, தவறாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

அப்படி ஃபரினா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா பதிவும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

ஃபரினா சமீபத்தில் தன் தோழிகளுடன் சேர்ந்து வால்பாறைக்கு ஜாலியாக டூர் சென்றுள்ளார். அங்கு, கூழாங்கல் ஆற்றில் ஆடி, விளையாடி, அங்கேயே மேகி சமைத்து, தோழிகளுடன் ஆற்றுக்குள் வைத்து சாப்பிட்டு ஒவ்வொரு தருணத்தையும் பயங்கரமாக என்ஜாய் செய்துள்ளார்.

அதைப் பார்த்த ஒரு நெட்டிசன்’ இந்த மாதிரி லொக்கேஷன்ல சமைச்சு ஃபிரெண்ட்ஸ் ஓட சாப்பிடுறது வேற லெவல் ஃபீலிங் என கமெண்டில் பதிவிட்டுள்ளார்.

வால்பாறை எங்கே உள்ளது?

காடுகள், பசுமை தேயிலைத் தோட்டங்களுடன் கண்ணைக் கவரும் வால்பாறை, கோவையில் இருந்து 100 கி.மீ.தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ.,தூரத்திலும் உள்ளது.

என்ன பார்க்கலாம்?

பாலாஜி கோயில், அக்கா மலை, வெள்ளமலை சுரங்கப்பாதை, சின்னக்கல்லார் அணை, சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சி, கீழ்நீரார் அணை, கூழாங்கல் ஆறு ஆகியவை வால்பாறையில் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்.

குறிப்பாக ஃபரினா சென்ற கூழாங்கல் ஆறு, கீழ்நீராறு அணையில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் வால்பாறை ரோட்டில் அமைந்துள்ளது. இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த அழகான ஆறு கூழாங்கற்களால் நிறைந்தது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment