திரையுலகில் அறிமுகமாகும் முன்பே பாரதிராஜா - இளையராஜா இருவருமே நெருங்கிய நண்பர்கள்.
பாரதிராஜாவின் முதல் படமான ’16 வயதினிலே’ படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. அதில் தொடங்கி 1992-ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடித் தென்றல்’ படம் வரை ஒவ்வொரு படமும் மெகா ஹிட் படங்களாக இவா்களது கூட்டணியில் அமைந்தன.
தற்போது இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் 'மார்கழி திங்கள்' படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும், இளையராஜாவும் இணைந்துள்ளனர்.
ஒருமுறை வைகம்மை பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜாவும், பாரதிராஜாவும் தங்கள் பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/QLwrzh843xOllA9KdBza.jpg)
அப்போது இளையராஜா குறித்து பேசிய பாரதி ராஜா, ’என்னோட சாதனைக்கு எல்லாம் உறுதுணையா இருந்தது இளையராஜா. இன்னைக்கு வர என் படம் பேசுதுனா, நான் எடுத்த காட்சிகளை விட இளையராஜாவின் பின்னணி இசைதான் காரணம்.
ஒரே ஒரு தடவதான் ரீல்ல பாப்பான். உடனே பேனாவ எடுத்து எழுத ஆரம்பிச்சுருவான். அதன்பிறகு வாசிச்சானா, அப்படியே சல்லு சல்லுனு போய் இசை விழும். இளையராஜா ஐந்து விரல்லயும் ஐந்து சரஸ்வதி இருக்கா.
நாங்க ரெண்டு பேரும் ஒரு காலத்துல, நாடகத்துல நடிக்கும் போது அங்கயும் வந்து என்னைய கலாட்டா பண்ணி டயலாக் பேச விடமாட்டான் என்று பாரதிராஜா பழைய நினைவுகளை பகிர, அப்போது குறுக்கிட்ட இளையராஜா, விஷயம் என்னன்னா? அல்லி நகரத்துல நாடகம் நடக்குது. ஒரு சீனுக்கு அப்புறம் டிரெஸ மாத்திட்டு போறதுக்கு, பாரதிராஜாகிட்ட டிரெஸ் இல்ல..
நான் கீழே உட்காந்து ஆர்மோனியம் வாசிச்சிட்டு இருந்தேன். அப்போ பாரதிராஜா என்கிட்ட வந்து சட்டைய கழட்டு, சட்டைய கழட்டுனு சொன்னான். நான் வாசிச்சுட்டு இருக்கேன்யா சொன்னேன்.
ஆனா, பாரதிராஜா சீனுக்கு போடனும் கழட்டுனு சொல்லி, என் சட்டைய மாட்டிட்டு போயி சீனுல நடிச்சுட்டான்.
இதுல எனக்கென்ன பிரச்சனைனா, அடுத்தநாள் நான் தெருவுல அந்த சட்டையத் தான் போட்டுட்டு போனும். அப்போ எல்லாரும் பாரதிராஜா சட்டையத்தானே நான் போட்டுட்டு வரேனு பேசுவாங்கனு யோசிச்சேன்.
அடுத்த சீனுல, பாரதிராஜா பூட்ஸ் பாலிஷ் போட்டுட்டு இருந்தாரு..
நான் உடனே அதே சட்டைய மாட்டிட்டு மேடைக்கு போயி பாலிஷ் போடுனு சொன்னேன். அதைத் தான் பாரதிராஜா கலாட்டானு சொல்றார் என்று இளையராஜா தன் நினைவுகளை பகிர்ந்தார்.
பிறகு பேசிய பாரதிராஜா, மேடையில ரொம்ப கலாய்ப்பான். நம்மள நடிக்க விடமாட்டான். இது நாடகம்.. எல்லாரும் பாக்கிறாங்கனு சொன்னா, கண்டுக்கவே மாட்டான். இன்னைக்கு வர அதைத் தான் பண்றான், என்றார் பாரதிராஜா…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“