விஜய் டி.வி,யில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் அக்ஷரா ரெட்டி. இவர் குடும்பம் 4 தலைமுறைகளாக சென்னையில் இருக்கிறது. அக்ஷ்ரா பிறந்தது, வளர்ந்தது, பள்ளி படிப்பு எல்லாமே சென்னை தான். கல்லூரி படிப்பு மட்டும் தான் ஷார்ஜாவில் படித்துள்ளார்…
2019-ம் ஆண்டு நடந்த `மிஸ் குளோப் வேர்ல்டு' அழகிப் போட்டியில் கலந்துகொண்டு மிஸ் குளோப் வேர்ல்டு பட்டத்தையும் பெற்றார்.
சமீபத்தில் ஐபிசி மங்கை யூடியூப் சேனலில் வெளியான அக்ஷரா ரெட்டி ஹோம் டூர் வீடியோ பலரையும் கவர்ந்தது.
நான் வீட்டுக்கு எப்போ வந்தாலும் முதல்ல போற இடம் புத்தர் சிலைதான். எனக்கு புத்தர் ரொம்ப பிடிக்கும். இந்த வீட்டுல எனக்கு ஃபேவரைட் ஸ்பாட், இந்த கோர்ட் யார்டு தான். இது ஹை சீலிங், மழை வரும்போது அந்த கிளாஸ்ல பார்க்கிறது ரொம்ப அழகா இருக்கும். இங்க உட்காந்துட்டு மேலே பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வீட்டுக்குள்ள எண்டர் ஆன உடனே இந்த ஏரியாதான் நீங்க பார்க்க முடியும், இந்த செடிகள் எல்லாம் நானே தேடி வாங்கிட்டு வந்தது. இதெல்லாம் நான் தான் டெக்கரேட் பண்ணுவேன். தண்ணிக்கூட நான் தான் ஊத்துவேன்.
அடுத்து டைனிங் ஏரியா. இந்த டைனிங் டேபிள், நான் தான் தேடி வாங்கினேன். இந்த முழு வீடும் ரஸ்டிக் ஃபீல்ல இருக்கும். அடுத்து ஓபன் கிச்சன் இருக்கு. சமையலுக்கு இது யூஸ் பண்ண மாட்டோம்.
அடுத்து பூஜை ரூம். அம்மாவுக்கு பிடிச்ச இடம். என் அண்ணாவுக்கும் கடவுள் பக்தி அதிகம். இங்க கோமாதா இருக்காங்க, சிவலிங்கம் இருக்கு. விநாயகர், எனக்கு ரொம்ப பிடிச்ச பாபா, வலம்புரி சங்கு இருக்கு. இங்க இருக்க படங்கள் எல்லாம் நாங்க வாங்கல, கோயில்கள்ல பூஜை பண்ணி எங்களுக்கு கொடுத்தது தான்.
வீட்டுல டோர், ஸ்டேர்ஸ் எல்லாமே கிளாஸ்ல இருக்கும். வீடு முழுக்க நிறைய செடிகள் இருக்கும். ஃபர்ஸ்ட் ஃபுளோர்ல பால்கனி ஓட கெஸ்ட் பெட்ரூம் இருக்குது.
இதுதான் என்னோட தியேட்டர் ரூம் கம் ஜிம் ரூம் வச்சுக்கலாம். முதல்ல இங்க தியேட்டர் ரூம் தான் இருந்தது. அப்புறம் எனக்கு ஜிம் எங்க வைப்பேன் எங்க அண்ணாகிட்ட கேட்கும் போது.. சரி இங்க வச்சுக்கோ சொல்லிட்டான். இங்க புரொஜக்டர்ல படம் பார்ப்போம்.
இதுதான் என் உயிர். இது இல்லாம நான் என் சைஸ் மெயிண்டேன் பண்ண முடியாது. தினமும் குறைஞ்சது ஒருமணி நேரம் நான் ஓடமுடியாட்டி நடக்காவாவது செய்வேன். இது எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். இது இல்லாம என்னால வாழ முடியாது.
இது என்னோட ரூம். 70 பர்செண்ட் நான் ரூமுக்கு உள்ளேயே இருப்பேன். எங்கயும் போகமாட்டேன். எனக்கு சூரிய வெளிச்சம் பிடிக்காது, லைட் ஆஃப் பண்ணிட்டா, இந்த ரூம் முழுக்க இருட்டா இருக்கும். எனக்கு சாஃப்ட் டாய்ஸ் ரொம்ப பிடிக்கும். இங்க இருக்கிற டாய்ஸ் எல்லாம் என்னோட ஃபேன்ஸ் எனக்கு கிஃப்ட் பண்ணது.
வார்டிரோப். அப்புறம் நம்ம எல்லாருக்கும் தேவையான கண்ணாடி. இது 8 அடி நீளம் 4 அடி அகலம். எனக்கு ரொம்ப நாளாவே பெரிய கண்ணாடி வேணும் ஆசை இருந்தது. எங்க அண்ணா எனக்கு வாங்கி கொடுத்தான். தினமும் நான் எவ்ளோ வெயிட் ஏறுறேன், இளைக்கிறேன் இதுல நான் எழுதி வைப்பேன்.
என்னோட ஃபர்ஸ்ட் ஃபுளோர் பால்கனி.. பிரெண்ட்ஸ் எல்லாம் வந்தா இங்க தான் இருப்போம்.
என் அண்ணா ரூம். வீட்டுல பொதுவா லெள பெட் தான் நாங்க வச்சுருக்கோம். என் அண்ணா ஃபார்முலா கார் ரேஸர். நிறைய ஜெயிச்சுருக்காங்க, அப்புறம் ரேஸிங் விட்டாங்க. அப்புறம் மொட்டை மாடி.
இது குட்டி சிட் அவுட் ஏரியா மாதிரி. நைட் டைம் இங்க சூப்பரா காத்து அடிக்கும். இங்க நல்ல அரட்டை அடிப்போம். பாட்டு கேட்போம்.
'இந்த வீடு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு வொயிட் கலர் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த வீடே ஒரு கண்டெம்பரரி டிசைன், ஃபர்னிச்சர்ஸ் எல்லாம் நிறைய வைக்காம, கொஞ்சமா வச்சுருப்போம். நிறைய காத்தோட்டம் இருக்கும். நிறைய சன் லைட் உள்ளே வரும். இயற்கைக் கூட பயங்கரமா கனெக்ட் ஆன மாதிரி இருக்கும்.
எனக்கு ரொம்ப பிடிச்சவங்கள மட்டும் தான் வீட்டுக்கு கூப்பிடுவேன் நான்… இந்த வீட்டுல நிறைய நியாபகங்கள் இருக்கு, இப்படி பல விஷயங்களை அக்ஷரா ரெட்டி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
இங்கே பாருங்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.